பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/313

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

311

நிலையம், பேரங்காடி வளாகம், நட்சத்திர உணவு விடுதிகள் போன்ற பல்வேறு நாட்டவர் குழுமும் இடங்களில் மட்டுமே ஆங்கிலம் அதிகம் பேசப்படுகிறது. மற்றபடி பன்னாட்டு வணிகத்தில் ஆங்கிலம் தொடர்பு மொழியாகப பயன்பட்டு வருகிறது.

புகழத் தெரிந்த அளவு ஆற்றலை அறிந்தோமா?

இங்கே பேசிய பலரும் தமிழை அடுக்கு மொழியில் புகழ்ந்துரைத்தே தம் பேச்சைத் துவங்கினார்கள். தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசியே 'சப்பானி’ ஆக்கிவிட்டோம். தமிழைப் புகழ்ந்து விட்டாலே தமிழுக்கு ஆற்ற வேண்டிய கடமையை, தொண்டைச்செய்து முடித்து விட்டோம், தமிழ் தானே வளர்ந்து விடும் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதோடு தமிழ் உலகையும் ஏமாற்றி வருகிறோம். தமிழைப் புகழத் தெரிந்த அளவுக்கு தமிழின் ஆற்றலை உணர்ந்து தெளிய முயன்றுள்ளோமா என்பதை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கடந்த நாற்பதாண்டு காலமாக தமிழின் ஆற்றலை அறிந்து, அந்த ஆற்றலை இன்றையக் காலச் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்பப் பயன்படுத்தி வெற்றி காணும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வெற்றி பெற்று வருகிறேன்.

இறவா மொழி

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தொல்காப்பியம் எனும் அற்புதமான இலக்கண நூலைப் பெற்ற தமிழ், தன் அடித்தளப் பண்பு சிறிதும் மாறா நிலையில் இன்று இருந்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு இருந்த பல மொழிகள் செத்தும், வழக்கொழிந்தும் தேய்ந்தும், சிதைந்தும் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்ததை, இருப்பதை இன்றைய மொழி வரலாறு எடுத்துக் கூறி வருகிறது.