பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

லிருந்து காட்டு விலங்கு வரை அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கைத் தேவைகளும் அவற்றைப் பெறும் வகைகளும் அமைந்துள்ளன.

ஆனால், மனித வாழ்க்கை அவ்வாறு அமைந்துள்ளதா என்றால் இல்லை என்றே கூற வேண்டியுள்ளது. காரணம், மனிதனைத் தவிர்த்து பிற உயிரினங்களின் தேவை மிக மிகக் குறைவு. ஆனால், மனிதனின் தேவை மிகமிக அதிகம். மனிதத் தேவைக்கும் - தேவையை விரும்பும் மன நிலைக்கும் அளவே இல்லை. எவ்வளவு தேவைகள் நிறைவு செய்யப்பட்டாலும் மனித மனம் நிறைவடைவதே இல்லை. மேலும் மேலும் தேவைகளை உருவாக்கிக் கொள்ளவும். அவைகளைப் பெறுவதற்கான வழிகளைக் காணவும் அவாவிய வண்ணமே இருப்பது மனித இனத்தின் இயல்பாகும். ஐந்து கார் வைத்திருந்தால் கூட, அமெரிக்காவில் ஒரு புதுவகைக் காரை உருவாக்கி வெளியாக்கியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டால், வசதியுள்ள பணக்காரன் அந்தக் காரை வாங்கிப் போர்ட்டி கோவில் நிறுத்திய பிறகே நிம்மதியடைகிறான். ஏனென்றால் இவனுடைய ஆசைக்கு அளவேயில்லை. ஆசைக்கேற்ப தேவையை வளர்த்துக் கொண்டே செல்வது மனித இயல்பு.

மனிதத் தேவை மண்ணிலும் விண்ணிலும்

எல்லா உயிரினங்களுக்கும் தேவையானவற்றைக் கண்ணுக்கு முன்னால் காட்டிய இறைவன் மனிதனுக்குத் தேவையான பலவற்றை கண்ணுக்கு நேராகக் காட்டாமல் அவற்றை மறைபொருளாக மண்ணுக்குள்ளும் கடலினடியிலும் விண்ணிலுமாக வைத்திருப்பதன் உட்பொருள் என்ன?

மற்ற உயிரினங்கள் அதிகபட்சமாக ஐந்தறிவைப் பெற்றுள்ளன. ஆனால், மனிதனுக்கு மட்டுமே ஆறாவது அறிவாகிய பகுத்தறிவை - சிந்திக்கும் திறனை - ஆற்றலை வேண்டிய அளவுக்குக் கொடுத்துள்ளான். இவ்வாறு