பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்த முனைந்து விட்டனர். உண்மைகள் நெடுங்காலம் உறங்க முடியாது' என உலகை எச்சரிக்கும் முறையில் பேசியிருப்பது பல தகவல்களை - உண்மைகளைப் புரிந்து கொள்ள வழி வகுக்கிறது.

56 அறிவியல் பிரிவுகளை வளர்த்த
500 அரபி விஞ்ஞானிகள்

இவ்வாறு பெருமானார் (சல்) காலந்தொட்டு வளர்ந்த - வளர்க்கப்பட்ட அறிவியல் பிரிவுகள் 56-க்கு மேலாகும். இவற்றின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட விஞ்ஞானிகள் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள்.

பத்தாண்டுகட்கு முன்பு தமிழ் உட்பட உலகின் 30 மொழிகளில் வெளிவரும் சர்வதேசத் திங்களிதழான "யுனெஸ்கோ கூரியர்" சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டோம். மருத்துவ உலகின் தந்தையாகப் போற்றப்படும் அவிசென்னா என்றழைக்கப்படும் இப்னு - சினாவின் ஆயிரமாவது ஆண்டுச் சிறப்பிதழாகும் அது. அந்த இதழில் உச்சகட்டச் செய்தியாக இடம் பெற்றிருந்தது ஆயிரம் ஆண்டுகட்கு முன்னதாக உலகத்தின் மிகச் சிறந்த அறிஞர்களாக - மேதைகளாக - அறிவியல் ஆய்வறிஞர்களாக இருவர் மட்டுமே உலகில் சிறந்து விளங்கினர். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். ஒருவர் இப்னு - சினா. மற்றொரு வர் அல் - புரூனி. அவ்விதழில் இடம் பெற்ற அனைத்து அறிவியல் செய்திகளிலும் நீக்கமற நிறைந்திருந்தவை இஸ்லாமிய அறிவியல் அறிஞர்களைப் பற்றியும் அவர்களின் ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்களேயாகும்.

அறிவியல் சொற்களாக மலர்ந்த அரபுப் பெயர்கள்

அறிவியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்திருப்பது கணிதமாகும். கணித கலைச் சொற்களில் சைஃபர், ஸீரோ (0) போன்ற பல கலைச் சொற்கள் அரபிச் சொற்களாகவே