பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

குலத்துக்கு அறவே தெரியாது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னால், வான ஆராய்ச்சிக்காக அமெரிக்கா பயோனீர் என்ற விண்கோளை அனுப்பியது. அது அற்புதமான முறையில் சூரிய மண்டலத்திலுள்ள பல்வேறு கோள்களையும் அவற்றின் தன்மைகளையும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக விரிவாக ஆராய்ந்து பல அரிய தகவல்களைத் தந்துதவியுள்ளது. இறுதியாக அது சூரிய மண்டலத்தைக் கடந்து, அதற்கு அப்பாலும் தன் ஆய்வுப் பயணத்தைத் தொடர்ந்தது. சூரிய மண்டலத்துக்கு அப்பால் அது கண்டறிந்த தகவல்களை பூமிக்கு அனுப்பியது. அத்தகவல்களை அமெரிக்காவிலுள்ள வானவியல் விஞ்ஞானிகள் கண்டு வாயடைத்துப் போனார்கள். காரணம், வானத்திலுள்ள சூரிய மண்டலம் போலவே, சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் அதே போன்று பல மண்டலங்கள் இருப்பதாகத் தகவல் அனுப்பியதுதான்.

இதைக் கண்டு அமெரிக்க வானவியல் ஆராய்ச்சியாளர்களான விஞ்ஞானிகள் வேண்டுமானால் வியந்து போய், ஆச்சரியத்தால் வாயடைத்துப் போயிருக்கலாம். ஆனால், திருக்குர்ஆனைப் படித்தறிந்த ஒரு முஸ்லிம் வியப்படையவே மாட்டான். காரணம், சூரிய மண்டலத்தைப் போல் பல மண்டலங்கள், எண்ணிக்கை அளவில் ஏழு வானங்கள் இருப்பதாகத் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதுதான்.

"அவன்தான் (பூமியையும் ) பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்காகப் படைத்தான். மேலும், அவன் வானத்தைப் படைக்கக் கருதி (யபோது) அவைகளை ஏழு வானங்களாகவும் அமைத்தான். அன்றி (அவற்றிலுள்ள) யாவற்றையும் அவன் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்." (2:29) என்றும்,

"(மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள