பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

எப்படி இருக்குமோ அது போலவே இருக்கும். அப்போது அது ஒரு சதைக் கட்டி போன்றே தோற்றமளிக்கும். இவ்வுருவைப் பெற்ற பிறகே, அதிலிருந்து நரம்புகளும் எலும்புகளும் உருவாக முடியும்" என்று கூறியபோது, சதைக் கட்டி என்ற தலைப்பிலேயே இதை திருமறை விவரிப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதை நாம் உய்த்துணரலாம்.

இப்படிப்பட்ட செய்திகளையெல்லாம் அறிந்து விஞ்ஞான உலகம் வியந்து கொண்டிருக்கிறது. ஏதேச்சையாக கருவளர் செயற்பாடுகளைத் திருக்குர்ஆன் விவரிக்கும் பாங்கை அறிய நேர்ந்த மருத்துவத் துறை வல்லுநரும் ஆய்வாளருமான டாக்டர் மாரிஸ் புகைல் அரபி மொழி கற்று, திருமறையை மூல வடிவில் படித்தபோது, இச்செய்திகளின் நுட்பங்கள் அவரை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கவே செய்தன. பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஞ்ஞான உலகம் கண்டறிந்த விஞ்ஞான உண்மை ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருமறையில் இடம் பெற்றிருக்கிறதென்றால், நிச்சயமாக இஃது மனிதனால் அனுமானிக்கப்பட்டு சொல்லப்பட்ட செய்தியாக இருக்கவே இயலாது. இறைவனால்தான் சொல்லப்பட்டிருக்க வேண்டும்; சொல்லியிருக்க முடியும். ஆகவே, இது இறைவேதம் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை எனக் கருதி, இஸ்லாத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட ஈமான்தாரியாக - முஸ்லிமாக ஆகி, இஸ்லாமிய அழைப்புப் பணிக்குத் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டதை நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.

திருமறை தரும் பிற உயிரினத் தோற்ற வரலாறு

மனிதப் பிறப்பின் ரகசியம் மட்டுமா? மனிதனைத் தவிர்த்துள்ள அனைத்து உயிர் வர்க்கங்களின் தோற்றம் பற்றிய அறிவியல் உண்மைகளையும் திருக்குர்ஆன் தெளிவாக்கத் தவறவில்லை.