அன்றும் - இன்றும்
அபுதாபி ஐமான் சங்கம் சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டிருக்கும் பெருமானார் பிறந்த நாள் விழாவிலே பங்குபெறும் இனிய வாய்ப்பை நல்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கும் ஐமான் அமைப்பாளர்கட்கும் ஈமான் அமைப்பினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உள நெருக்கம் பெற கருத்துப் பரிமாற்றம்
இங்கே உங்கள் முன் உரையாற்றத் தொடங்குமுன் ஒரு எண்ணத்தை அழுத்தமாக நெஞ்சத்தில் பதியவைத்துக் கொண்டுதான் பேசுகிறேன். நான் பேசப் போகும் செய்திகள் எதுவும் உங்களுக்குத் தெரியாததல்ல. ஆயினும், அவற்றை உங்களோடு உரசிப் பார்க்கும் வகையிலும் ஒப்பிட்டறியும் முறையிலும் ஒரு சில கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள விழைகிறேன். இன்னும் சொல்லப் போனால் உங்களோடு சேர்ந்து சில விஷயங்களை சிந்திக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
இங்கே வரவேற்புரையாற்றிய தலைவர் என்னைப் பலவாறு பாராட்டிப் பேசினார். எல்லாப் புகழும் வல்ல