பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


'யார்?' என்பதல்ல, 'என்ன?' என்பதே முக்கியம்

இங்கே எனக்கு முன்னால் பேசியவர்கள் ஒரு கருத்தைக் கோடிட்டுக் காட்டத் தவறவில்லை. மணவையாரின் சமுதாயப் பணிகளை முஸ்லிம்கள் சரியான முறையில் அறிந்து, உணர்ந்து கௌரவிக்கவில்லை என்பதே அது. எங்கோ இருக்கின்ற ஆழ்வார்கள் ஆய்வு மையம் இவரது பணிகளைப் பாராட்டி தங்கத் தாமரையும் ஆயிரக்கணக்கில் பணமும் பரிசாகத் தந்து பாராட்டுகிறார்கள். தமிழ் நாட்டின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் முத்தையச் செட்டியார் நினைவுப் பரிசை அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையும் காஞ்சி காமகோடி பீடம், சங்கராச்சாரியார் நினைவுப் பரிசான 'சேவா ரத்னா' விருதையும் வழங்கிக் கௌரவிக்கிறது. ஆனால், நம் இஸ்லாமிய சமுதாயம் எந்த பரிசும் பாராட்டும் கௌரவமும் தந்து சிறப்பிக்கவில்லையே என்றெல்லாம் தங்கள் ஏக்கத்தை ஆதங்கமாக வெளிப்படுத்தத் தவறவில்லை. இஸ்லாமிய சமுதாயம் என்னை உரிய முறையில் மற்றவர்களைப் போன்று கௌரவிக்கவில்லை என்பதை நான் பெரும் குறையாகக் கருதவில்லை. என்னைவிட அறிவாற்றலும் செயல்திறனுமிக்கவர்கள் நம் சமுதாயத்தில் எத்தனையோ பேர் இருக்கவே செய்கிறார்கள். அத்தகையவர்களில் தக்கவர்களை, தகுதி மிக்கவர்களை இனங்கண்டு போற்ற இயலாத வகையில் இந்த இஸ்லாமியத் தமிழ்ச் சமுதாயம் தடுமாறிக் கொண்டுள்ளதே என்பதுதான் என் ஆதங்கம். மற்ற சமயத்தவர்கள் எப்போதுமே 'யார்?' என்பதைவிட 'என்ன?' என்பதிலேயே கருத்தூன்றிக் கவனிக்கிறார்கள். இன்றைக்கு அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் முத்தைய நினைவுப் பரிசாக ரூபாய் ஐம்பதினாயிரமும் ஒரு கிலோ எடையுள்ள வெள்ளித் தட்டில் பாராட்டையும் பொறித்து பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கும் போது மணவை முஸ்தபா யார்? எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று பார்ப்பதில்லை. மணவை முஸ்தபா என்ன செய்திருக்கிறான்