பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இந்தப் பேரரசு அந்த நாட்டை கல்வியாலும் கலாச்சார மேம்பாட்டாலும் தொழில் வளத்தாலும் விவசாயப் பெருக்கத் தாலும் கட்டிக்கலை, தோட்டக்கலை போன்றவற்றாலும் உயர் வடையச் செய்தது என்பது முஸ்லிம் அல்லாத வரலாற்றாசிரியர் களும் ஒப்புக் கொண்டிருக்கின்ற ஒன்று, ஆனால், எந்த ஒரு வரலாற்றாசிரியனும் அங்கிருந்து கிருத்துவ மதத்தை, அங்கு நடந்த இஸ்லாமியப் பேரரசு வெளியேற்றியதாக குறித் தானில்லை. கிருத்துவர்களென்ன, கிருத்துவ சிற்றரசுகளும் அங்கு நடந்த இஸ்லாமியப் பேரரசின் கீழ் ஆட்சிச் சுதந்திரத்தோடு மதச் சுதந்திரமும் பெற்று இயங்கி வந்தன என்பதை நேரிய வரலாற்றாசிரியர்கள் செப்பவே செய்கின்றனர். பிற மதத்தை, மத ஆலயங்களை, அம்மதம் சார்ந்த அறிஞர் களை. மத குருமார்களை யெல்லாம் சிறுமைப் படுத்தாது வாழச் செய்துவந்த ஸ்பெயின் நாட்டு இஸ்லாமியப் பேரரசை 15 - ந் தாம் நூற்றாண்டில், அந்தாட்டு கிருந்துவ சிற்றரசொன்றில் தோன்றிய இஸபெல்லா என்ற பெண்மணி தன்னோடு மற் றொரு சிற்றரசனையும் திருமணம் மூலம் இணைத்துக் கொண்டு அழித்தொழிப்பதில் முற்பட்டாள், . இஸ்லாமிய அரசை அகற்றுவதில் அவளோ அல்லது அவனோ அல்லது இரண்டு பேரும் இணைந்தோ மேற்கொண்ட நடவடிக்கைகளை அரசியல் எழுச்சி, வீழ்ச்சி என்ற அடிப்படை யில் உலகம் மறந்து விடலாம், அல்லது மன்னிக்கலாம். ஆனால் மிகப் பெரும் அந்நாட்டில் ஒரே ஒரு முஸ்லிமைக்கூட வாழுமாறு அவ்விருவரும் விட்டுவைக்கவில்லை. கசாப்புத் தொட்டிக்கு ஆட்டுமந்தைகளை வளைத்தும் பிணைத் தும் இழுத்துச் செல்வது போன்று ஆண், பெண், முதியோர் இளைஞர், சிறுவர் என்று பாகுபாடின்றி முஸ்லிம் சமயத்தாரை வளைத்துப் பிடித்துக் கட்டி இழுத்துச் சென்று கொன்று தீர்த்தாள் இஸபெல்லா.