. இயலவில்லை. எனவே, இஸ்லாம் இந்து இந்து மதத்திற்கு விரேதமானது எனப் பொய்ப்பிரச்சாரம் நடத்தி வருகிறது. இஸ்லாமியர், அரபு நாட்டிற்கு இந்தியாவைக் காட்டிக் கொடுத்து விடுவர் எனக் கூறுகிறது. 'இந்துக் கலாச்சாரத்தை நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களைக் குழி தோண்டிப் புதைத்து விடும் இஸ்லாம்' என பசப்பிப் பகை மூட்டுகிறது. இதை நான் சொல்வதைவிட மேதை எம்.என். ராய் கூறியிருப்பதைப் பார்த்துக் கொள்வது நல்லது. 'இந்தியாவில் சாக, ஸ்கீதியர், ஹூனர்கள், குஜர், பாத்தியர் முதலிய பல மதங்களையும் அவற்றின் கலாச்சாரங் களையும் சேர்ந்தோர் படிப்படியாக இந்துமதமாக்கப்பட்டு விட்டனர். இஸ்லாம் அப்படி ஆகிவிடவில்லை. (ஆக்கிட வேண்டும் என்பதே இந்து மதத்தார் எண்ணம்) "இஸ்லாத்தின் சரித்திரச் சாதனை” எனும் தனது நூலில், எம். என். ராய். 'எண்ணத்தை எதிலோ வைத்துக் கொண்டு, அதைச் சாதித்திட எது எதையோ சொல்லுகிறார்கள் இஸ்லாத்தைப் பகைப்போர்' என்பதை, எம்.என். ராய் கூற்று மெய்ப்பிப்ப தாக உள்ளது. இஃதன்றி உண்மையான இந்து மதத்திற்கு மட்டுமல்ல, வேறு எந்த ஒரு மதத்திற்கும் இஸ்லாம் விரோத மானதல்ல என்பது தெளிவு. இஸ்லாம் இந்து மதத்திற்கு மட்டிலுமல்ல, வேறு எந்த ஒரு மதத்திற்குமே ஏன், நாத்திகர்கட்கும்கூட எதிரானதன்று. திருக்குர்ஆனைக் கற்றறிந்தோர் இதனை அறிவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளைப் படித்துள் ளோரும் அறிவர். இஸ்லாமிய மக்களின் நடைமுறைகளும் இதனை மெய்ப்பிக்கும். இவற்றிற்கு மேலாக வெள்ளைய ராட்சியும். அவ்வாட்சியைத் தாங்கி நின்ற சுய சிந்தனையற்ற எழுத்தாளர்களும் எழுதிய நூற்களை விட்டு விட்டு இந்திய -4
பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை