பக்கம்:இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"முஸ்லிம் மன்னர்கள் சிலைகளை எடுத்தேகி விட்டார்கள்'. என்பதே! ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும். இவ்விரண்டிடங் களிலும் கடைசியாக இருந்தது வெள்ளையர்கள் ஆட்சிதான். அவர்கள்தான் அழகிய சிலைகளைத் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்வதில் ஆர்வம் உள்ளவர்கள். எனவே ஏன் அவர்கள் எடுத்தேகி இருக்கக் கூடாது? எடுத்தேகிவிட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டிருக்கக் கூடாது? அல்லவென்றால் முஸ்லிம் மன்னர்கள் உடைத்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? கான் . மதுரையை ஆண்ட யூசுப்கானுக்கும் (கான் சாகிபுக்கும்) ஆற்காடு நவாபு முகம்மதலிக்கும் மதுரையில் போர் நடந்தது. முகம்மதலியின் படையினர் ஓர் இரவில் மதுரைக் கோட்டை யின் கொத்தளத்தை இடித்து விட்டனர். அதுபோது யூசுப் அரண்மனையில் துயில் கொண்டிருந்தான். மதுரை மீனாட்சி அம்மை பார்ப்பனச் சிறுமி வடிவிலே யூசுப்கான் முன் தோன்றி, "எதிரிகளால் கோட்டை இடிக்கப்படுகிறது; தூங்கிக் கொண்டிருக்கிறாயே? எழுந்திரு! எழுந்துசென்று கோட்டையைக் காப்பாற்று' எனக்கூறி எழுந்து செல்லப் பணித்ததாக "கான்சாயபு சண்டை" என்கின்ற நூலில் காணப்படுகிறதே! இவர்கள் கூறுவது போன்று கான்சாகிப் கோயில்களை இடித்துச் சிலைகளை உடைத்துக் கோயில் சொத்துக் களைக் கொள்ளையிடுகின்ற வர்க்கத்தினன் ஆனால் அவனுக்கு எப்படி மதுரை மீனாட்சி உதவியிருக்க இயலும்? 86 " உண்மை என்னவென்றால், முஸ்லிம்களின் ஆட்சி இங்கு தோன்றுவதற்கு முன்னர் இங்கு ஆண்ட இந்து மன்னர்களால் போர்க்காலங்களில் கோயில் மதில்கள் இடிக்கப்பட்டிருக் கின்றன. காரணம் அவை அரண்களாகப் பயன்பட்டதால் ! கோயில் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன, போர்ச் செல விற்குத் தேவைப்பட்டதால்! சிலைகள் தகர்க்கப்பட்டன. தூக்கி எறியப்பட்டன மதக்காழ்ப்பால்! இவற்றிற்கு ஆதாரம் இந்து மதத்தைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களே தமது நூல்களில் தந்திருக்கக் காணலாம்.