பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தை கூடும் இடத்திலே
சாலை ஓரம் தன்னிலே
குந்தி இருந்த சோதிடர்
குறிகள் பார்த்துக் கூறுவார்.

‘அதிர்ஷ்டப் பரிசு கிடைக்குமா?’
‘ஆண்கு ழந்தை பிறக்குமா?’
‘மதிப்பு உலகில் உயருமா?’
‘மனத்தில் கவலை நீங்குமா?’

இந்த வகையில் கேள்விகள்
ஏது ஏதோ அவரிடம்
வந்து மக்கள் கேட்பது
வழக்க மாகி விட்டது.


107