பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தட்டி ஒட்ட லாயினன், தயக்க மின்றிக் குதிரையை. "துட்டு துட்டு, என்றுமே துரத்தி முருகன் ஓடினன், துரத்திச் சென்ருன்; ஆயினும் சோர்ந்து போனன். மிகவுமே உரத்த குரலில் கூவியும் ஒன்று மில்லை டயனுமே. அதிக தூரம் ஒடியே அலுத்துப் போன முருகனும் குதிரை சென்ற திசையிலே குரல் எடுத்துக் கூறினன்;

  • குதிரைக் கார நண்பனே!

கொண்டு செல்வாய் முயலின. அதனை உனக்கு நானுமே அளித்த பரிசாய்க் கொள்ளுவாய் : 113