இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிட்டுக் குருவி ஒருவீட்டின்
- சிறிய அறைக்குள் மெதுவாக
எட்டிப் பார்த்தது. அங்கொருவர்
- எண்ணிப் பார்த்தார் காசுகளை.
காசுகள் யாவும் பொன்னாகும்!
- கருத்துடன் அவற்றைத் தினம்தினமும்
ஓசையில் லாமல் எண்ணிடுவார்.
- ஒருமுறை யல்ல; பலமுறைகள்!
“காசே கடவுள் எனக்கருதும்
- கருமி, கருமி, கருமியடா.
மோசக் காரர்!' என்றவரை
- வெறுப்புடன் ஊரார் பேசிடுவார்.
47