இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அலைகள் இல்லாக் குளத்திலே
அதிக மீன்கள் பிடிக்கவே
வலையை இருவர் விரித்தனர்;
வளைத்து மீனைப் பிடித்தனர்.
வலையில் அதிக மாகவே
வந்து விழுந்த மீன்களை
கலயம் தன்னில் நிரப்பினர்;
கையில் எடுத்துச் சென்றனர்.
அருகில் இருந்த மரத்திலே
அமர்ந்தி ருந்த குரங்குமே
‘குறுகு’ றென்று இதனையே
கூர்ந்து பார்க்க லானது.
46