பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்த வார்த்தை கேட்டதும்
ஏதோ அவனும் எண்ணினன்;
தந்தி ரத்தின் உதவியால்
தப்பிச் செல்லக் கருதினன்.

‘மன்னர் சிங்கம் அவர்களின்
மாம னாகும் பாக்கியம்
இன்று நானும் பெறுவதே
முன்பு செய்த புண்ணியம்.

‘மன்னர் சிங்கம் அவர்களின்
மனைவி யாகப் போகிறாய்’
என்று நானும் சொன்னதும்
எனது மகளும் மகிழுவாள்.

ஒன்று மட்டும் கேட்டிடு.
உயர்ந்த மிருக ராஜனே!
என்றன் மகளோ பயந்தவள்;
எதற்கும் நடுங்கும் இயல்பினள்.

கூர்மை யான பற்களும்
குத்திக் கிழிக்கும் நகங்களும்
பார்த்த வுடனே நடுங்குவாள்:
பயந்து மணக்கத் தயங்குவாள்.


63