பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூட்டில் அடிமை போல இங்கே
வாழு கின்றநீ
குடும்பம் பெருகு தென்று கூறி
மகிழ்ச்சி கொள்வதேன்?
வாட்டம் நீங்க வழியில் லாத
இந்தக் கூட்டிலே
வளரும் குடும்பம் அடிமை வாழ்வை
வளர்க்கும் குடும்பமே!’


70