பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பறவைகள் மாநாடு கூட்டினவே. அங்குப்
பற்பல பறவைகள் வந்தனவே.
‘சிறந்தநல் பறவையை அரசனென்றே நாங்கள்
தேர்ந்தெடுப் போ’மெனக் கூறினவே.

அரசர் பதவிக்குப் போட்டியிட்டே, அங்கு
ஐந்தாறு பறவைகள் நின்றனவே.
‘திறமை மிகுந்தவன் நான்’என்றே ஒவ்வொன்றும்
தேர்தல் முழக்கங்கள் செய்தனவே.

‘அன்பர்களே, என்னைத் தேர்ந்தெடுத்தால் நானும்
அதையும் இதையும் செய்வே’னெனவே
என்னென்ன வோகூறிக் கூட்டத்தார் தம்மையே
இழுத்திடப் பார்த்தன தங்கள்பக்கம்.


75