பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தப் பானை மிகமிக
அருகில் நெருங்கி வந்ததும்
இந்தப் பானை அதனிடம்
ஏக்கத் தோடே உரைத்தது.

“வெண்க லத்தால் ஆனநீ
மெதுவாய் என்னைத் தொடினுமே
என்றன் வாழ்வு முடிந்திடும்.
எட்டி நிற்பாய்; புண்ணியம்!

இருவர் பெயரும் ஒன்றுதான்.
இருந்த போதும், நாமுமே
உறவு கொள்ள முடியுமோ?
ஒதுங்கிப் போவாய்” என்றது.

‘குணத்தில் அதிக வேற்றுமை
கொண்ட இருவர் நண்பராய்
இணங்கி வாழ்தல் அரிதுதான்’
என்றே கதையில் அறிகிறோம்.


85

2994-6