பக்கம்:ஈச்சம்பாய்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தாயாய்ச் செய்துவரும் மனைவி லட்சுமி மாமி! குழந்தையில்லாத இவர்களின் நடப்புகளை உணர்வுகளைச் சுற்றிக் கதைப் பின்னல்!

பஞ்சாபகேசன் ஓய்வுபெறும் நாளில் அலுவலகத்தில் வழியனுப்பு விழா! இறுதியில் ஏற்புரை நிகழ்த்திய பஞ்சாபகேசன், மனைவியை விழி ஆடாமல் பார்த்துக் கைகளை உயரே உயரே தூக்கிக் கும்பிடுகிறார். உடனே இலட்சுமி மாமி "ஏன்னா, ஏன்னா" என்று பதறி எழுகிறார். "பஞ்சாபகேசன் கும்பிட்ட கரங்களை இறக்காமல், கொட்டும் விழிகளைத் துடைக்காமல், உடலாட, உயிராட நின்றார். பிறகு கூட்டத்தைப் பார்த்து மீண்டும் திரும்பி, 'எல்லாத்துக்கும் இந்த உத்தமி... இந்த' என்றார். பங்சாபகேசனால் பேச முடியவில்லை. கூட்டத்தினரின் கண்களிலும் ஒட்டுமொத்தமாய் நீர் சுரந்தது." கதையில் நெஞ்சைக் கரையச் செய்துவிடும் பகுதி இது. தியாகத்தின் உருவமான மாமிக்குக் கழுத்தில் புற்று. இன்னும் ஒரு மாதம்தான் உயிர் வாழப் போகிறார் என்று கதை முடியும்போது நெஞ்சம் கனத்துப் போகிறது. இந்தக் கதை என்னைப் பாதித்ததை நண்பர் சமுத்திரத்திடம் பகிர்ந்து கொண்டபோது 'பஞ்சாபகேசனும் லட்சுமியும் வாழ்ந்த மாந்தர்கள், நிகழ்ச்சிகளும் உண்மையானவை' என்றார். இரக்கம் இன்னும் அதிகமானது.

கருநாடகக் கதைகள்

இரக்கம் என்பது அனுபவத்தைப் பகிர்ந்தளிப்பதோடு அறிவை, விரிவு செய்வதாகவும், கண்டவற்றைப் புதிய ஒளியில் காட்டுவதோடு காணாதவற்றைப் புலப்படுத்துவதாகவும் அமைய வேண்டும். கருநாடக மாநிலத்தில் செய்தி விளம்பரத் துறை அதிகாரியாகப் பணியாற்றியபோது அங்குப் பல பகுதிகளுக்கும் சென்று அடித்தட்டு மக்களோடு பழகி அவர்களை மையமாகக் கொண்டு பல கதைகள் எழுதியவர் சமுத்திரம். கருநாடக மக்களைப்பற்றி அதிகமான கதைகளை எழுதிய தமிழ் எழுத்தாளர் இவர் என்றும் கூறலாம். புதியனவற்றைப் புலப்படுத்தும் வகையில் அமைந்துள்ள அக்கதைகளில் மலைவாழ் மக்களின் பழக்க வழக்கங்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/10&oldid=1495092" இலிருந்து மீள்விக்கப்பட்டது