பக்கம்:ஈச்சம்பாய்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

ஈச்சம்பாய்



சிரிப்பாய்ச் சிரித்தபடி... "என்ன மாவீரரே-- என்ன நடந்தது.. எங்க போச்சு... உங்க அதட்டல்? உருட்டல் என்றாள்" ராமைய்யா, அவள் கண்களை மீண்டும் தவிர்த்து வேறுபுறமாக திரும்பிக்கொண்டு யாருக்கோ சொல்வதுபோல் சொன்னார்.

"நம்ம ரெண்டு பேரையும்... கார்ல உட்கார வைச்சு பார்க்க அவனுக்கு ஆசையாம். டிசம்பர்க்குள்ள இரண்டாயிரம் டாலர் சேர்த்துவிடுவானாம்... அந்த பணத்துல டிசம்பர் லீவுல இங்கே வந்து நம்மை பார்த்துட்டு போக ஆசையாம்... ஆனால் நமக்கு கடன் இருக்கிறதே நினைச்சு பார்த்து மனசைக் கல்லாக்கி பணத்தை அனுப்புவானாம்... பெரிய புத்தரு... இந்த வயசிலேயே ஆசைய அடக்குறார்.. பிள்ளையா வளர்த்திருக்கே... பிள்ளை."

"எங்கே... இன்னொரு தடவை, என்னை பார்த்து நேருக்கு நேராய் சொல்லுங்க..."

கோதையம்மா, அந்த ஐம்பது வயது கணவரின் முகத்தை, செல்லமாகத் திருப்பினாள். அப்பொழுது, அவர் முதலிரவு கோதைபோல் நாணப்பட, இவளோ, அதே இரவு ராமைய்யாபோல் அவர் முதுகை தட்டிக்கொடுக்க இருவரும் உருவம் மாறாமலே உணர்வு மாறி நின்றார்கள்.

- 'செம்மலர்' ஆகஸ்ட் 1996.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/180&oldid=1371702" இலிருந்து மீள்விக்கப்பட்டது