பக்கம்:ஈச்சம்பாய்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

ஈச்சம்பாய்


அவளிடம், பத்து வயது குறைந்தவன் போல் நடந்து கொண்டான். சிலசமயம் மாத்திரைகளைக்கூட மறுத்து விட்டான். பார்த்தியா.. மாத்திரை சாப்பிடாட்டியும் பிரஷர் ஏறல பாரு" என்று சொல்லிக் கொண்டான்.

அவன் - அப்பாத்துரை, வந்துவிட்டான் போலும்.

அவன் வீட்டில், ரேடியோ சத்தம் கேட்டது. சந்திரா அந்தப் பாட்டுக்கு ஏற்ப முணுமுணுத்தாள். அவன் கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது. அவன், தன் வீட்டுக் கதவைத் தட்டுவான் அல்லது காலிங் பெல்லை அடிப்பான் என்று கதவருகே வந்தாள். எதுவுமே நடக்கவில்லை . உரக்கக் கிளம்பிய அவன் காலடிச் சத்தம், சன்னஞ் சன்னமாயக் குறைந்து கொண்டிருந்தது.

அவள், கதவைத் திறக்கப் போனாள். பிறகு அவளுள்ளும் ஒரு வைராக்கியம். 'ஒங்களை மனம்நோகப் பேசிவிட்டேன். மன்னிச்சிடுங்க..... என்று மட்டும்தான் பேசப் போனால், ரொம்பத்தான் பிகு செய்யுறார். வீட்ல டெலிபோன்காரர்கள் டெலிபோன் 'பிக்ஸ் செய்வதற்காக வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போகிறவர்... டூருக்கு முன்னாலும் கொடுக்கல, பின்னாலும் கொடுக்கல. அடியே வெளியே போகாதடி... கம்மாக்கிட, டெலிபோன் வந்துட்டான்னு ஒயரைத்தான் பார்க்கப் போறேன், அவரை அல்ல.'

அவள், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். டெலிபோன் ஒயர் இல்லை. அதாவது அவருக்கு இன்னும் டெலிபோன் வரவில்லை. சாவியை ஏன்.. என்னிடம்...

பூட்டிப்போட்ட அவள் மனம் திறந்தது. அவன் யதார்த்தமாகவும் - ஒரு வேளை விகற்பம் இல்லாமலும் முன்பு சொன்ன கமெண்ட் இப்போது அவளுக்குக் காமனாய்த் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/188&oldid=1371684" இலிருந்து மீள்விக்கப்பட்டது