பக்கம்:ஈச்சம்பாய்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

ஈச்சம்பாய்


கொண்டார்கள். குமுதா, தன் ஜோடியை ஏறிட்டுப் பார்த்தாள். இது என்ன அலங்கோலம் - முகத்தில் கரடித் தாடி, ஒரே ஒரு காதில் மட்டும் வளையம், பெண் மாதிரி லேசான கொண்டை அவளை விட ஓரடி உயரம்.

பாண்டியன். மன்னிக்கவும் பாண்டியா... குமுதாவின் சுருங்கிப் போன கையைப் பிடித்து மெல்ல தன் பக்கமா இழுத்து கைகொடுத்தான். உடனே ஒரே கைதட்டுகள். ஒன்ஸ் மோர் கேட்டு இன்னொரு தட்டுகள். குமுதாவுக்கு அவமானமாக இருந்தது. பொறுத்துக் கொண்டாள். பேயனுக்கு வாழ்க்கைப்பட்டு புளியமரத்தில் ஏறிய கதை...

வரிசையாக நிறுத்தப்பட்ட பைக்குகளில் அத்தனை புதிய ஜோடிகளும் ஏறிக் கொண்டன. ஒரு காலத்தில், சோலை வனமாகி இப்போது பாலைவனமான அந்தப் பூங்காவின் சாம்பலில் துளிர்விட்ட செடிகளை துண்டித்தபடியே, புல்வெளிப் பாதையை சிதைத்தபடியே அத்தனை வண்டிகளும் சிதறிச் சிதறிச் சென்றன. சல்வார் கமிசுகள், பொம்மைச் சட்டைகள் மேலே தோன்ற அந்த பைக்குகள், யந்திர வண்ணத்துப் பூச்சிகளாய் - அந்த பூச்சிகளே பறப்பதை மறந்து துள்ளுவது போல் தோன்றியன.

குமுதா, மோட்டார் பைக்கின் பின்னிருக்கையில் விலகித்தான் இருந்தாள். மனம் ‘இளங்கோ இளங்கோ’ என்று ஜெபித்துக் கொண்டிருந்தது. குளிர்கால எதிர்க்காற்று, பருவக் காற்றாய் அவள் மூக்கில் இனம்பிரியாத வாசனையை தாவ விட்டது. ஆங்காங்கே சோடி சேர்ந்து போனவர்களை, அவள் பறவைப் பார்வையாய், பறந்தபடியேப் பார்த்தாள். ஒரு ஆங்கிலோ இந்திய இளைஞன், முட்டிக்கால் துணியோடு தன் தோளில் தலைபோட்டு நடந்த முக்கால் வெள்ளைக்காரியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/36&oldid=1371983" இலிருந்து மீள்விக்கப்பட்டது