பக்கம்:ஈச்சம்பாய்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

59


“நீ இவ்வளவு சொல்றதால, அதே டெப்டி டைரக்கடர, நீ இன்னும் கணக்கு காட்டாத ஜியி.எப்., அட்வான்ஸ், எல்.டி.சி., கணக்குக்குக் கொண்டுவராத ஒன்னோட வெள்ள நிவாரணக் கடன், பெஸ்டிவல் அட்வான்ஸ், சைக்கிள் லோன்... இதுங்களையும் பிடிடான்னு சொல்ல வைக்கட்டுமா?”

“கோவிச்சுக்காத கண்ணா - கம்மா ஒரு பேச்சுக்குத்தான். நீ சொல்றதையெல்லாம் பிடிச்சா நான் கோவிந்தாதான். ஏதோ பேசிட்டேன்... நீ இல்லாட்டி யாரு எனக்கு உதவறதுக்கு இருக்காங்க...”

“அப்படி வா வழிக்கு”

“எப்போதும் உரத்த குரலில் பேகம் சண்முகமும், பொடி வைத்துப் பேசுவதில் நிபுணனான முரளியும், எங்கே அடித்துக் கொள்ளப் போகிறார்களோ என்று, குத்துக்கல்லாய் இருந்த எல்லாரையும் பதறிப் பார்த்த மீனா, இப்போது, குறுஞ் சிரிப்பாய் சிரித்தாள். முரளி நீட்டிய காகிதக் கட்டுக்களை அவள் காணாமலே நின்றபோது, தனியறையில் கனகசபாபதி வெளிப்பட்டார். அவரைப் பார்த்துவிட்டு, டிரைவர் மணியின் மனைவி ஓடி ஒளிந்து கொண்டாள், அவர், சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு கேட்டார். பதவிக்கேற்ற கனத்த குரல்... குரலுக்கேற்ற தடியுடம்பு.. “என்ன கலாட்டா? யோவ்... நீங்கள்லாம் யாருய்யா? கடன்காரக் கிராக்கிகளா? வெளியே போய் நில்லுங்கய்யா... இது என்ன சத்திரமா? சாவடியா? முரளி.. இங்கே என்னமோ சத்தம் கேட்டது?”

“ஒண்ணுமில்ல சார்... புதுசா வேலைக்கு சேர்ந்த மீனாவுக்கு இது முதல் சம்பளம்! அதனால் ஸ்வீட், காரம், காபி கேட்டோம்.”

“அப்படியாப்பா சண்முகம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/61&oldid=1371953" இலிருந்து மீள்விக்கப்பட்டது