பக்கம்:ஈச்சம்பாய்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

67



'அவர்' அவளருகே வந்தான். படுக்கையில் ஒருக்களித்துக் கிடந்தவளை தலையைத் தூக்கி, இருக்க வைத்தான். கண் பக்கம் விரலாட்டிப் பேசினான்:

"அவங்க மிளகாய் அரைக்கிறதுக்கு, நீயே, உன் தலையை கொடுத்திருக்கியே! என் கஷ்டம் தெரிந்தால் இப்படி செய்வியா? பேசாமல் லஞ்ச்சை கேன்சல் செய்... தின்னிப் பயல்கள்..."

"எப்படிங்க கேன்சல் செய்ய முடியும்? எனக்குன்னு ஒரு முகம் வேண்டாமா?"

"மொதல்ல தாலி போட்டவன் முகத்தைப் பார்! உன் கல்யாணத்துக்கு வாங்குன கடன் இருபதாயிரம் இருக்குது. உனக்கு தாலி செய்ய வாங்கின கடன் பத்தாயிரம் ரூபாய்.... காலேஜ்ல எம்.பி.ஏ., சீட் வாங்க கொடுத்த லஞ்சத் தொகை பதினையாயிரம்... இவ்வளவு கடனையும் அடைக்கணுமே. நீ இப்படி தான்தோன்றித்தனமா செலவழிச்சால் எப்படி?"

"என்னங்க... பெரிய பெரிய வார்த்தையா பேசுறீங்க? ஆபீஸ் மூலம் 'டிவி' செட், ரேடியோ செட் வாங்கலாமுன்னு நினைச்சேன். பேங்க்ல, கன்சூமர் லோன் இருபதாயிரம் தருவாங்களாம். நீங்க என்னடான்னா என் எதிர்பார்ப்புக்கு எதிரா பேசுறீங்களே?"

கட்டியவன், கட்டிலில் மீண்டும் உட்கார்ந்து, கட்டியவளைத் தழுவிக் கொண்டான். அவளை மார்போடு கவிழ்த்து, அவள் உச்சந்தலையில் முகம்போட்டு, அவள் பிடரியை வருடிக் கொடுத்தபடியே பாராட்டினான்.

"நிஜமாவே நீ என்னை விட புத்திசாலி. வேலையில் சேர்ந்த உடனேயே இருபதாயிரம் ரூபாய் கடன் வாங்கணுமுன்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/69&oldid=1371973" இலிருந்து மீள்விக்கப்பட்டது