பக்கம்:ஈச்சம்பாய்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

71



காதுகளைக் குவித்தபடி 'வந்துட்டேன், வந்துட்டேன் என்று கூவியபடியே நகர்கிறார். வரவேற்பறையிலிருந்து, கதவுக்குப் போவதற்குக் கையூன்றச் கவர் இல்லை. நடந்துதான் போக வேண்டும். அவரைப் பொறுத்த அளவில், அது தலைகீழாக நடப்பது மாதிரி. என்ன செய்யலாம்?

"லட்சுமி... லட்சுமி!"

பதில் இல்லை . 'டொக் டொக் டொக்'

கதவுச் சத்தம் வலுத்தது.

'அய்யய்யோ . எவ்வளவு அவசரமாய் இருந்தால், இவ்வளவு நேரம் பொறுமையாய்க் கதவைத் தட்டுவாளோ?

பஞ்சாபகேசன், யோசிக்கவில்லை. தம்மால், தனித்து நடக்க முடியாது என்பதும் அப்போது தெரியவில்லை. சுவரில் அப்பிய கரங்களை எடுத்தபடி, கதவை நோக்கி நடந்தார். ஒரே ஒரு தடவைதான் கால்களை மாற்றி வைத்தார். அதற்குள், "அய்யோ .. ஓ, காட்" என்று சொல்லியபடியே மல்லாக்க விழுந்தார். அவர் விழுந்த வேகத்தில், அவர் கைபட்டு நாற்காலியும் மல்லாந்து சாய்ந்தது. நாற்காலியின் இடுக்குக்குள் கைகளை விட்டபடியே, பஞ்சாபகேசன், கால்களை அந்தரத்தில் துழாவிக் கொண்டிருந்தார்.

பஞ்சாபகேசன் போட்ட சத்தம் சின்னதுதான் என்றாலும், அது ஆன்மாவின் சத்தம் என்று அறிவுறுத்தப் பட்டவள்போல், லட்சுமி மாமி, புடைவையை, உடம்பு எங்கும் தாறுமாறாய்ச் சுற்றியபடியே, கதவை உடைப்பதுபோல் திறந்து, கணவனை அந்தக் கோலத்தில் பார்த்த பிரமிப்பில் நின்றாள். சில விநாடிகளில் பிரமை கலைந்து, அவர் கரங்களை நாற்காலிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/73&oldid=1371978" இலிருந்து மீள்விக்கப்பட்டது