பக்கம்:ஈச்சம்பாய்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7


இ.ஆ.பா.க்கள்

ஆட்சித்துறையிலும், காவல்துறையிலும் இருப்பவர் சிலர் சாதிச் சங்கத்தினராகச் செயற்படுகின்றனர். தனக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்பு வேண்டாமென்று உரிய காலத்தில் ஓய்வுபெற்ற நேர்மையான இ.ஆ.ப. அதிகாரி பழனிச்சாமி! இவரைச் சாதிச் சங்கத்திற்குத் தலைவராக்க முடிவு செய்து அறிவிக்க வந்த சாதிக்காரர்கள்! அவர்களில் சாதிவெறி பிடித்த இ.ஆ.ப. இளைய அதிகாரி ஒருவர் - பழனிச்சாமியின் மகளைப் பெண்பார்த்துச் சென்று மருமகனாவார் என்னும் எதிர்பார்ப்பில் இருப்பவர்! சங்கத் தலைவர்க்குப் பல வசதிகள் செய்து தரப்படும் என்று சொல்கின்றார். இந்த நிலையில் பழனிச்சாமி 'மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குவோர் எல்லோரையும் சமமாகக் கருதவேண்டும். சாதி உணர்ச்சி கூடாது' என்று அறிவுரை கூறிச் சங்கப் பெறுப்பை ஏற்க மறுத்துவிடுகிறார். திருமணம் தடைப்பட்டு விடுமோ என வருந்துகின்ற மனைவி, மகள் ஒருபுறம். 'தேறாத கேஸ்' 'கிறுக்கன்' என்னும் சாதிக்காரர்கள் ஒருபுறம். இவர்களிடையே எதை இழந்தாலும் மனிதத் தன்மையை இழக்க விரும்பாத மாவீரராகப் பழனிச்சாமி! அதிகாரிகள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பணியில் இருப்பவர்களுக்கும், ஓய்வு பெற்றவர்களுக்கும் உணர்த்தும் பயன்பாட்டு இலக்கியமாய்ச் சிறக்கிறது 'பிணமாலை'.

ஒரு பூ மலர்வதுபோல...

என் நெஞ்சை மிகவும் நெகிழச் செய்த கதை 'கட்டக் கூடாத கடிகாரம்'. ஒரு பூ மலர்வதுபோல இயல்பாக அவிழ்ந்து மணக்கிறது. உணர்வு மயமாகி ஒன்ற வைக்கிறது. வழக்கமாக எதிர்கொள்ளும் கதை மாந்தர்கள் அல்லர் இதில் வருபவர்கள். பணியிடைக்காலத்தே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, தானே நடக்க இயலாத பஞ்சாபகேசன்! திறமையான அரசு அதிகாரியான அவரைக் குளிப்பாட்டுவது முதல் அலுவலகத்துக்குக் கொண்டுசெல்வது, அழைத்து வருவது உட்பட அனைத்துப் பணிவிடைகளையும் தோழியாய்த்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/9&oldid=1495091" இலிருந்து மீள்விக்கப்பட்டது