பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

ஈரோடு மாவட்ட வரலாறு


எம்.ஏ. ஈஸ்வரன், ஆர், லூர்துசாமி, திருமலைக்கவுண்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு கொங்கலம்மன் கோயில் அருகே உப்புக் காய்ச்சிச் சிலர் கைதாகினர்.

1942 ஆகஸ்டு கிளர்ச்சியின் போது 19.8.42, 24.8.42 ஆகிய நாட்களில் டெலிபோன் ஒயர்கள் 1 மைல் நீளம் வெட்டப்பட்டது. 23.8.42.இல் சாவடிப்பாளையத்தில் இரயில்பாதை தகர்க்கப்பட்டது. செப்டம்பரில் ஆர்.டி.ஓ ஆபீஸ் தீ வைக்கப்பட்டது.

கே.ஏ.ஷேக் தாவூது சாகிப் அவர்களும். ஈ.கே.ஹாஜி முகமது மீரா சாகிப் அவர்களும் 1.1.1933இல் அரசு அவர்களுக்கு அளித்த கான் சாகிப் பட்டத்தை வேண்டாம் என்று திருப்பி அளித்தனர்.

ஈரோட்டு உணவு விடுதிகளில் "பிராமணாள் சாப்பிடும் இடம்", "இதராள் சாப்பிடும் இடம்", "தாழ்த்தப்பட்டவர்கள் சாப்பிடும் இடம்" என்று தனித்தனியாக இருந்தது. இப்படி வேறுபாடு காட்டினால் உணவு விடுதிக்கு அனுமதியில்லை என்ற தீர்மானத்தை கே.ஏ.ஷேக் தாவூது அவர்கள் தலைமையில் கேசவலால் காளிதாஸ் சேட் நகராட்சியில் கொண்டுவர எம். சிக்கயநாயக்கர் வழிமொழிய ஏகமனதாகவே நிறைவேற்றப்பட்டது. ஆர்.கே. வெங்கிடுசாமி அவர்கள் தலைவராக இருக்கும் போது நகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளிட்ட எல்லாக் கட்டிடங்களிலும் தேசியக்கொடி பறந்தது.

பெயர் மாற்றம்

1927இல் திறக்கப்பட்ட "பீப்பில்ஸ் பார்க்" வ.உ.சி. பூங்கா ஆனது. ஈரோட்டிலிருந்த இராணி தெரு ஆசாத் தெரு என்றும் மெக்ரிகர் தெரு சிவசண்முகம் தெரு என்றும் மெக்வெப்ஸ்டர் தெரு காமராஜ் தெருவென்றும் வெட்டர்பர்ன் தெரு முத்துரங்கம் தெரு என்றும் லார்டு நேப்பியர் தெரு நேதாஜி தெரு என்றும் எர்ஸ்கின் தெரு காந்திஜி தெரு என்றும் பிராடிதெரு ஜின்னா தெரு என்றும் பிஷர் தெரு ஆர்.கே. வெங்கிடுசாமி தெரு என்றும், வெல்ஸ்பார்க் பன்னீர் செல்வம் பூங்கா என்றும் பல பெயர்கள் தேசியப்பற்றால் மாற்றப்பட்டன.