பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

115



திங்களூர்

திங்களூரிலிருந்து சுங்கக்காரன்பாளையம் செல்லும் வழியில் உள்ள கோயில் தோட்டத்தில் புஷ்பதந்த தீர்த்தங்கரர் கோயில் உள்ளது.

கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்று மூன்று பாகங்களையுடைய கோயில். மூலவர் 9ஆம் தீர்த்தங்கரர் புஷ்பதந்தர் மண்டபத் தென்புற அறையில் பிரமயட்சன் உருவம் உள்ளது.

10ஆம் தீர்த்தங்கரர் சீதளநாதர் உருவமும் குதிரை வாகனமும் இருந்ததாக கோவை கிழார் குறிப்பிடுகிறார் (1953). இன்று அவை இல்லை. இக்கோயில் மடப்பள்ளியில் உள்ள கோநாட்டான் விக்கிரம சோழனின் 40ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு அம்மண்டபத்தை "சிங்களாந்தகன்" என்று குறிக்கிறது. இதை அமைத்தவன் அறத்துளான் முத்தன் பொன்னன் ஆன கணித மாணிக்கச் செட்டி என்பவர் (கி.பி.1045)

இக்கல்வெட்டு திங்களூரை 'சந்திரவசதி' என்று குறிக்கிறது. வசதி என்பது பஸ்தி என்ற சொல்லின் திரிபு ஆகும். பஸ்தி என்பது சமணக் கோயிலைக் குறிக்கும். திங்களூர்ச் சிவன்கோயில் இறைவன் பெயர் சந்திரபுரி ஈஸ்வரர்.

பூந்துறை

ஈரோடு -அறச்சலூர்ப் பாதையில் 12ஆம் கிலோ மீட்டரில் உள்ள பூத்துறையில் 23ஆம் தீர்த்தங்கரர் பார்சவநாதர் கோயில் உள்ளது. இங்கு இயக்கி பத்மாவதி உருவச்சிலையும் உள்ளது. இக் கோயில் கி.பி.1508ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டதாகக் கிழக்குச் சுவர்க் கல்வெட்டுக் கூறுகிறது.

இனாம் தாசில்தார் ராபின்சன் காலத்தில் 30 ஏக்கர் பூமி இருந்ததாகக் கூறுகிறார்கள்.

விசயமங்கலம்

பெருந்துறை - கோவை நெடுஞ்சாலையில் பெருந்துறையிலிருந்து 10ஆவது கிலோ மீட்டரில் உள்ள விசயமங்கலத்தில் புகழ்