பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

117


வடக்கே 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் கோவில் உள்ளது. 1889ல் அங்கு கல்வெட்டு இருந்ததாக 1925ல் நாகய்யர் என்ற சமண அர்ச்சகர் கோவை கிழாரிடம் கூறியுள்ளார்.

சமணக்கோயில் உள்ள இடங்களில் எல்லாம் சமண சமயம் பற்றியோ அந்தக் கோயில் பற்றியோ உள்ளூர் மக்களுக்கு எதுவும் தெரிவதில்லை. பொதுவாகக் சமணக் கோயில்களை 'அமணீசுவரர்” என்று சிவனாகவே கருதுகின்றனர்.

பரஞ்சேர்வழியில் தீர்த்தங்கரர் உருவச்சிலை சிவன்கோயில் அருகே பாதையோரம் உள்ளது. தி.அ.முத்துசாமிக்கோனார் (1934) தாராபுரத்திலும், காங்கயத்திலும் சமண தீர்த்தங்கரர் உருவம் இருந்த தாகக் கூறுகிறார்.

ஈரோடு மாவட்டத்தில் சிறப்புடன் இருந்த சமணம் 'திகம்பர சமணம்' பிரிவைச் சேர்ந்ததாகும். பழைய சமணக் குடும்பம் பூந்துறை யிலும், விசயமங்கலத்தில் மட்டும் உள்ளன.

ஈ) இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கத்திற்கும் ஈரோடு மாவட்டத்திற்கும் நெருங் கிய தொடர்பு உண்டு, காங்கயம் வட்டக் காடையூர் பொருளந்தைகுலக் காங்கேயன் மனைவி சேடகுல வெள்ளையம்மாளுக்கு வாக்களிக்கப் பட்ட காணியுரிமை மறுக்கப்பட்ட போது, இஸ்லாமிய சர்தார் ஒருவர் முயற்சியால் வெள்ளையம்மாள் காணி பெற்றார். இஸ்லாமிய சர்தா குக்கு நன்றிக்கடன் ஆற்ற வெள்ளையம்மாளின் நான்கு மக்களும் அவர்கள் வழிவந்தவர்களும் குழந்தைப்பருவத்தில் காது குத்தாமல் "முழுக்காது குலத்தினர்" என்று இன்றும் அழைக்கப்படுகின்றனர். சுன்னத் சடங்கிற்கு இணையாக 'காது குத்துக்கலியாணம்' நிகழ்வில் காதுகுத்துவர்.

ஈரோடு வட்டம் காகத்திலும், பெருந்துறை வட்டம் காஞ்சிக் கோயிலிலும் கொங்கு வேளாளர்களில் கண்ண குலத்தார் 'ராவுத்த சாமி' என்ற குல தெய்வத்தை வணங்கி வருகின்றனர். அவரை 'டில்லி