பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

121


வருடந்தோறும் ஒவ்வொரு வகுப்பாக உயர்வு பெற்று 1959ஆம் ஆண்டு முதல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 1963இல் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் “கிப்கு" (குர்ஆன் மனனம்) "கிரா ஆத்தும்" (குர் ஆன் ராகத்துடன் ஓதல்) வகுப்புகளும் தொடங்கப்பட்டு நடைபெறுகிறது. ஒன்று முதல் ஏழு வகுப்பு வரை 'மௌல்வி' (மதக்கல்வி போதனை) வகுப்பும் தமிழில் தடைபெறுகிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும் உணவும், உறைவிடமும் இலவசமாகப் பெற்று பயின்று ஏமன், குவைத், இலங்கை முதலிய உலகின் பல நாடுகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகின்றனர்.

ஈரோடு நகர, மாவட்ட வளர்ச்சியில் இஸ்லாம் மார்க்கத்தினர் பெரும்பங்கு வகித்துள்ளனர். கே.ஏ. காதர் மைதீன் (1920-21) கே.ஏ. ஷேக்தாவூது (1930-1938), ஈ.கே.எம். முகமது அப்துல் கனி (1959- 1964) ஆகியோர் ஈரோடு நகராட்சி மன்றத் தலைவர்களாக இருந்துள்ளனர். கே.ஏ. ஷேக் தாவூது அவர்கள் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், ஈரோடு மாவட்டக் கழக உறுப்பின ராகவும் இருந்துள்ளார். மகாசன உயர்நிலைப்பள்ளியை (1899) நிறுவியதில் அலாவுதீன் சாகிபு முக்கிய பங்கு வகித்தார். ஈரோடு மாவட்ட விடுதலைப் போராட்ட வீரர்களில் 20 பேர் இஸ்லாமியர்கள். தேசியத் தலைவர்களான அலி சகோதரர்கள் நினைவாக ஈரோடு மணிக்கூண்டுப் பகுதிக்கு 'அலி சவுக்' என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.

உ) கிறித்துவ சமயம்

ஈரோடு மாவட்டத்தில் கத்தோலிக்கத் திருச்சபையே முதன் முதலில் மறைபரப்பும் பணியை மேற்கொண்டது.

1608ஆம் ஆண்டு தாராபுரத்தில் இயேசு சபையைச் சேர்ந்த (JESUIT MISSION) இராயந்து என்ற குருவால் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது, ஈரோடு மாவட்டத்தில் முதலில் கிறித்துவ சமயத்தைக்