பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

ஈரோடு மாவட்ட வரலாறு


காலூன்றச் செய்தவர் தன்னை 'மேற்கத்திய அந்தணன்' என்று அழைத்துக் கொண்டவரும் பின்னாளில் தத்துவ போதகர் என்று அழைக்கப்பட்டவருமான இராபர்ட் டி நொபிலியே ஆவார். அவர் சத்தியமங்கலத்தில் ஒரு தேவாலயம் கட்டினார். சத்தியமங்கலம் பாளையக்காரர் ஆதரவு கொடுத்ததால் பின்னர் அப்பகுதியில் 15 தேவாலயங்கள் உருவாகின.

ஈரோடு, அந்தியூர் பகுதிகளிலும் இராபர்ட் டி நொபிலி பணியாற்றினார். அவருடன் இம்மானுவேல் மார்ட்டின்சு, அந்தோனியோ விக்கே என்ற குருமார்களும் இணைந்து பணியாற்றினர். இராபர்ட் டி நொபிலி தொடங்கிய பணிகளை ஈரோடு மாவட்டத்தில் பல்தாசர் கோஸ்ட்டா அடிகளாரும். அவர் உதவியாளர் சவுரிராயன் உபதேசியாரும் தொடர்ந்து செய்தனர். 1643இல் சத்தியமங்கலம் அருகேயுள்ள அமலப்பாளையத்தில் அவரால் 150 வேளாளர் குடும்பங்கள் கிறித்துவர் ஆயினர்.

இராபர்ட் டி நொபிலியுடன் பணியாற்றிய இம்மானுவேல் மார்ட்டின்சு வானிப்புத்தூர், வாலிபாளையம் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். கணுவக்கரை பணிமையத்தில் ஈரோடு, தாராபுரம், கோவை, சோமனூர், கருமத்தம்பட்டி, எல்லமங்கலம் ஆகிய 130 ஊர்களும் 23 ஆலயங்களும் 6000 மக்களும் இணைக்கப்பட்டனர். மைசூர் - மதுரை நாயக்கர் போராலும் மராத்தியப் புடையெடுப்பாலும் 1877-78இல் ஏற்பட்ட காவிரி, பவானி வெள்ளப் பெருக்காலும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொற்று நோய்களாலும் கிறித்துவக் குடியிருப்புக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அந்நிலையிலும் பெனடிக்ட் நெகோரா, அந்தோணி பெரேரா ஆகியோர் தொடர்ந்து சமயப்பணியும் சமுதாயப்பணியும் செய்தனர். இவ்விருவரும் 1685இல் மறைந்தனர்.

ஆங்கிலேயர்கள் கிறித்துவர்கள் என்பதால் திப்புவின் அதிகாரிகளால் ஈரோடு மாவட்டக் கிறித்துவர்களுக்குப் பற்பல தொல்லைகள் ஏற்பட்டன. பணிகளைச் சீரமைக்க அபே துபாய் அடிகளார் வந்து கருமத்தம்