பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

ஈரோடு மாவட்ட வரலாறு


தொடக்கத்தில் 1909இல் ஈரோட்டில் மருத்துவமனை அவரால் தொடங்கப்பட்டது.கொங்கு நாடு மிஷன் சார்பில் தாராபுரத்திலும் மருத்துவமனை தொடங்கப்பட்டது. ஏ.டபிள்யூ. பிரப் ஈரோடு நகர் மன்றத்தலைவராகவும் விளங்கினார். (1904-1905)

இலண்டன் மிஷன் சங்கம் தென்னிந்தியத் திருச்சபையாக மாற்றம் பெற்று மெத்தாடிஸ்ட் பணிகளும் அதனோடு இணைக்கப்பட்டன. 1947இல் தென்னிந்தியத் திருச்சபை (சி.எஸ்.ஐ) திருச்சி-தஞ்சை மண்டலத்தில் தாராபுரம் இணைக்கப்பட்டது. 1950இல் கோவை நீலகிரி மாவட்டத்தோடு சேர்ந்து தொடங்கப்பட்ட கோவைத் திரு மண்டலத்தின் கீழ் ஈரோடு வந்தது. கோவை மாவட்டத்து ஆங்கிலிக்கன் பணிகளும் தென்னிந்தியத் திருச்சபையோடு இணைக்கப்பட்டன.

தமிழ்ச் சுவிசேஷ லுத்தரன் சபை என்ற பெயரில் நடைபெற்ற பணி மூலம் 1888இல் ஈரோட்டில் தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. இதனை ஜெர்மன் பணிவிடையாளர்கள் 1856இல் தொடங்கப்பட்ட 'லைஃப் சீக்' (Life Seek) அமைப்பின் மூலம் நடத்தி வந்தனர். 1919இல் சுவிடன் நாட்டுப் பணியாளர்களும் இத்துடன் இணைந்தனர். அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், சிறுமுகை, காவேரிபுரம், சாம்பள்ளியில் நடைபெற்ற இவர்கள் பணியினை இலங்கை இந்தியா பொதுச் சங்க சபை (CIGM) மேற்பார்த்து வந்தது.

ஏ.டபிள்யு.பிரப்பை அடுத்து ஈரோட்டுக்குப் பணியாக வந்த எச்.ஏ.பாப்லி தமிழ் கற்ற புலவராக விளங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகவும் மறைமலையடிகள் தலைவராக விளங்கிய திருவள்ளுவர் நாட்கழகத் துணைத்தலைவராகவும் விளங்கினார். இவர் கல்விக்காக ஆற்றிய பணி மிகச் சிறந்தது. தொழிலோடு கூடிய பயிற்சிப் பள்ளியை இவர் நிறுவினார். மேலும் இவர் ஈரோடு இலக்கியக் கழகத்தைத் தொடங்கினார். எஸ்.மீனாட்சிசுந்தர முதலியார் துணையோடு ஈரோட்டில் உள்ள எல்லா ஆசிரியர்களையும் இணைத்து