பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

ஈரோடு மாவட்ட வரலாறு


தூய இருதய ஆலயம், ஈரோடு இரயில்வே காலனி

டி.சி. உபகாரசாமி என்ற முதல் இந்தியப் பேராயரால் 29.9.1941 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 11.2.1943இல் அடைக்கலம் என்ற குருவால் கட்டிமுடிக்கப்பட்டது.

தூய தெரசாவின் ஆலயம், கொளப்பலூர்

பிரெஞ்சு திருத்தூதுவர்களால் 1909இல் சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பள்ளியும் நடைபெற்றது. இப்போதுள்ள ஆலயம் 1938இல் தந்தை அவுடியா என்பவரால் கட்டப்பட்டது.

தூய பேதுரு மற்றும் பவுல் ஆலயம், வாலிபாளையம்

இவ்வூர் 1886இலேயே கிறித்துவக் கிராமம். 1837இல் பைகாப் குருவும், 1841இல் பாக்ரோ குருவும் பணியாற்றினர். பள்ளி நடைபெறும் பழைய ஆலயம் 1989இல் தந்தை ட்ரைகொட் என்பவரால் கட்டப்பட்டது. இப்போதைய ஆலயம் 1900இல் தந்தை விபான்செக் என்பவரால் கட்டப்பட்டது.

தூய இருதய ஆலயம், கோபிசெட்டிபாளையம்

இவ்வாலயம் 1962இல் கட்டப்பட்டது. இவை தவிர ஈரோடு மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன.

தென்னிந்திய திருச்சபை ஆலயங்கள்
பிரப் நினைவாலயம், ஈரோடு

ஆஸ்திரேலியாவிலிருந்து 1894ல் கோவையில் பணி செய்யத் தொடங்கிய அந்தோனி வாட்சன் பிரப் 1897இல் ஈரோடு வந்தார். 1927இல் ஈரோட்டில் ஆலயம் கட்டத் தொடங்கினார். 1930இல் முடிக்கப்பட்டு முதல் தமிழ்ப் பேராயர் அசரியா அவர்களால் அர்ப்பணிக்கப்பட்டது. சிமெண்ட் இல்லாமல் காரையுடன் முட்டை கலந்து அறைத்துக் கட்டப்பட்டது. முட்டையால் வழவழப்பு ஆக்கப்பட்டது. சுவர் எவ்வளவு உயரமோ அவ்வளவு ஆழம் பூமிக்குள் அத்திபாரம்