பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

ஈரோடு மாவட்ட வரலாறு


'ஸ்ரீபாதம்' என்று ஓர் ஆவணம் கூறுகிறது. அடியை 'தேவர்தம் செருப்புக் காலால் ஓரு அடியாக' 'நம் பாட்டனார் கால் ஒரு அடி' என்று வருவதால் அரசனது கால் (பாதம்) அளவே அடி எனப்பட்டது. என்பதை அறியலாம். 'நாழிகை' தூரம் என்பது 1 நாழிகை (24 நிமிடம்) நேரம் ஒருவன் சராசரியாக நடக்கும் தூரம் ஆகும். 'காதம்' என்பது பல காலங்களில் பலவாறான தூரமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கிராமத்தில் 'கூப்பிடு தூரம்' என்றும் 'காடு' என்பதை அடிப்படை அலகாக வைத்து 3 காட்டுத்தூரம், 4 காட்டுத் தூரம் என்றும் வழங்கினர், அளந்த நிலம் 'புள்ளி புக்க நிலம்' எனப்பட்டது.

கிழக்கிந்திக் கம்பெனி வந்தவுடன் அது 'கும்பினியடி' என்றும் பழைய அடி 'சாதியடி' என்றும் கூறப்பட்டது. 'விரற்கிடை' (விரல் அளவு) சாண், முழம், மார் எனவும் அளவு இருந்தன. மார் என்பது இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நேராக நீட்டினால் உள்ள அளவாகும். அளக்கப்பயன்பட்ட கயிறு பிற்காலத்தில் சங்கிலியாக மாறி விட்டது.

“தசராபுரம் சீமைக்கு அமுலாக வந்த ராசமானியராசஸ்ரீ ஆர்டீக துரையவர்கள் சீமையை 25 பாகம் சங்கிலியால் மலை கரடு பாதை, அளாதி தரிசு, ஓடை, நிலம் சகலமானதும் அளந்து" என்பது ஈரோடு மாவட்ட மெக்கன்சி ஆவணம் ஆகும்.

மூகந்தளத்தல்

இராசகேசரிக்கால், பரகேசரிக்கால், ஆனந்தக்கூத்தன், வீரநாராயணன், சோழியநாழி, கொங்கு நாழி, குறுப்பு நாழி, பொன்னாடு நாழி எனப் புலவகையான முகத்தல் அளவைகள் கல்வெட்டில் காணப்படுகின்றன. எண்ணெய் காணம், குடம் எனவும் அளவில் குறிக்கப்பட்டது. செவிடு, ஆழாக்கு, உழக்கு, பதக்கு, உரி,நாழி, குறுணி, கலம் என்றும் படி, வள்ளம், மரக்கால், மொடா, சலகை, பொதி என்றும் முகத்தல் அளவுகள் இருந்தன. இரண்டு படி கொண்ட அளவு பின்னாளில் 'பட்டணம்படி' எனப்பட்டது.


எல்லா அளவைகட்கும் சிறிய அலகின் கீழ் முக்கால், அரை, கால், அரைக்கால் முதலிய கீழ் அளவுகளும் இருந்தன. விசயமங்கலம்