பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

143


கல்வெட்டில் பண்டாரத்தில் "நிறைச்ச அளவாக அளக்க" என்று கல்வெட்டு வெட்டியிருந்தது கூறப்படுகிறது. கோயில் பண்டாரங்களுக்குத் தனி அளவு கருவிகள் இருந்தன. முகத்தல் அளவுகளில் அளவு கருவியைச் சோதித்து முத்திரையிடப்பட்டது.

எண்ணெய் அளக்கும் போது அளந்தபின் படியை உயர்த்திச் சற்று நேரம் பிடித்துப் பின் கையைப் படியினுள் துழாவி உள்ளே ஒட்டி யிருக்கும் எண்ணெயையும் அளிக்க வேண்டும். கல்வெட்டில் ”எண்ணெய் அளக்கும் போது இழுத்துப் பறித்து அளப்பாராக” என்று கூறப்பட்டுள்ளது.

குறைவாக அளந்து கொடுப்பது பெரிய பாவமாகக் கருதப்பட்டுள்ளது. ‘குறையளவு அளந்தேனோ? அதனால்தான் எனக்கு மகப்பேறு வாய்க்கவில்லையோ" என்று பெண்ணொருத்தி கூறுவதாகக் கொங்கு நாட்டு நாட்டுப்புற இலக்கியம் கூறுகிறது.

நாணயம்

முன்பு பெரும்பாலும் பண்டமாற்று முறையில் வணிகம் நடைபெற்றது. அதனால் பல குழப்பம் ஏற்படவே நாணயம் புழக்கத்திற்கு வந்தது என்பர். ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல், கத்தாங்கண்ணி படியூர்க்கு வண்ணக்கல் மணிகளை வாங்க வந்த ரோமானியர் காசுகள் மேற்கண்ட ஊர்களில் கிடைத்துள்ளன.

சங்க காலத்திலிருந்து கொங்கு நாட்டை ஆட்சி செய்த அரசர்களின் பல காசுகள் இங்கு கிடைத்துள்ளன. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுக்களில் கீழ்க்கண்ட காசுகளின் பெயர்கள் கிடைத்துள்ளன.அவை

அச்சு (பொற்காசு) பாலயன் புள்ளிப்பணம்
புள்ளிக் குளிகை பொன் (பொற்காசு)
ஆனை அச்சு பெஞ்சை நகர்ப்பணம்
கண்டி பொன்னாகரம்
கண்டிராயன் மயிலிப்பணம்
கலிபணம் மதுரைச்சக்கரம்
கம்பெனி அரும்பு மதுரைச் சுழிமின்னல் பணம் வரி