பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

159


ஐரோப்பாத் திட்டங்களை ஆய்வு செய்து ஜெர்மன் நாட்டினுடைய 'ரூரல் கோவாபரேடிவ் சொசைட்டி' மாதிரி அமைக்கப் பரிந்துரை செய்தார். அதற்கேற்ப 1895ஆம் ஆண்டு வேளாண்மை உதவிக்காக "லேண்ட் அண்ட் அக்ரிகல்ச்சரல் பேங்க்" தொடங்கப்பட்டது. 1917இல் அது சென்னை மாநில கூட்டுறவு வங்கியாக மாற்றப்பட்டது. வேளாண்மையோடு பிறவகைப் பயன்பாட்டையும் இவை அளித்தன.

1906ஆம் ஆண்டு கல்கத்தாவில் தொழில் இயக்குநரும் தொழில் பொறியாளரும் நியமிக்கப்பட்டனர். அவர்கள் உதக மண்டலத்தில் தொழில் வளர்ச்சி தொடர்பாக ஒரு கருத்தரங்கிளை 1908ஆம் ஆண்டு நடத்தினர். 1914ஆம் ஆண்டு சென்னை மாநில தொழில்துறை தொடங்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு தொழில் உதவிக் கழகம் தொடங்கினர். 1951ஆம் ஆண்டு மாவட்டத் தொழில் அலுவலர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டனர்.

விவசாயத்துக்கு உதவ 1882ஆம் ஆண்டு "நில அபிவிருத்திச் சட்டம்" கொண்டு வரப்பட்டது. கிணறு, ஏரி, குளம், வாய்க்கால் அமைக்க பாசன வசதிக்காக நீண்டகாலக் கடன் கொடுக்கப்பட்டது. 1884ஆம் ஆண்டு 'விவசாயக் கடன் சட்டம்' கொண்டு வரப்பட்டு கால்நடை, விதை, உரம் முதலியவை வாங்கக் கடன் அளிக்கப்பட்டது. விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படவே, அடைமான நிலச் சட்டம் கொண்டு வரப்பட்டுப் பின் 1935ல் விவசாயிகளுக்காகக் "கடன் வாங்கியோர் பாதுகாப்புச் சட்டம்" கொண்டு வரப்பட்டது.

தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கிகள் 12. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் 227 உள்ளன. அவை பல வழிகளில் உழவர்களுக்கு பயன்படுகிறது.

சந்தைப்படுத்துதல் - விற்பனைக்குழு

விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் மிக அவசியம் ஆகும். அவ்வகையில் “ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்" மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. 1933இல் "சென்னை விளைபொருட்கள் விற்பனைச்சட்டம்" கொண்டு வரப்பட்டது. அதன்படி 1938இல்