பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

161


விவசாயத்தில் நவீன உத்திகள்

பழைய சாகுபடி முறையிலேயே பலர் விவசாயம் செய்தாலும் உழவர்கள் சிலர் நவீன உத்திகள் பலவற்றைக் கடைப்பிடிக்கின்றனர். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுகளும் "புதிய வீரிய விதைகளும்" பயிற்சி வகுப்புகளும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் நன்கு வேளாண்மையில் முன்னேற்றம் காண உதவுகின்றன. “தோட்டக் கலைச் சாகுபடியாளர்கள் சங்கம்" அமைத்துக் கடந்த பதினைந்து ஆண்டுகளாக பிற மாவட்டங்களிலும், பிற மாநிலங்களிலும் இயங்கி வரும் சிறந்த பண்ணைகளைப் பார்வையிட்டு ஏற்றவற்றை தாங்களும் பின்பற்றுகின்றனர்.

அரசு வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தீவிரத்திட்டம், அபிவிருத்தித் திட்டம், பலபயிர்த் திட்டம் மூலமும் நல்ல பலன்கள் ஏற்பட்டு வருகின்றன. மண் பரிசோதனை, சொட்டு தீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம், திசு வளர்ப்பு போன்றவைகளையும் பயன்படுத்துகின்றனர். உழவு, நடவு, அறுவடை, போர் அடித்தல் போன்றவற்றிற்கு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மண் புழு வளர்ப்பு, இயற்கை முறை வேளாண்மை ஆகியவற்றில் மாநிலத்திலேயே ஈரோடு மாவட்டம் முதலிடம் பெறுகிறது. வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை பல இதழ்களும் ஏற்படுத்தியுள்ளன, ஈரோடு மாவட்ட விவசாயிகள் உற்பத்திகளில் பல பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர். வழக்கமான பயிர்களையே பயிரிடாமல் சிலர் புதிய பயிர்கள் வளர்த்துப் பயன்பெறுகின்றனர். ஏக்கருக்கு 28 டன் கரும்பு உற்பத்தி செய்த சக்தி சர்க்கரை ஆலைப்பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு 42 டன் கரும்புவரை இன்று உற்பத்தி செய்வது விவசாய முன்னேற்றத்துக்கு ஒரு சீரிய எடுத்துக்காட்டு.

விளைபொருட்கள்

ஈரோடு மாவட்டத்தில் நெல், கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம் முதலிய தானிய வகைகளும் பகுப்பு வகைகளும் மஞ்சள், கரும்பு. மரவள்ளிக்கிழங்கு போன்ற பணப்பயிர்களும் நிலக்கடலை, எள்,