பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

165


மாநிலத்தின் பல இடங்களில் தொழில்களை விளக்கும் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. நெசவுத் தொழில், கிராமத் தொழில்கள் பற்றி அறிவுரை வழங்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு "தொழில் உதவிச் சட்டம்" (State Aid to Industrial Apt) இயற்றப்பட்டது. முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் விவசாயம் போல தொழிலுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. 1951ஆம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் 'மாவட்டத் தொழில் அலுவலர்' (District Industrial Officer) நியமிக்கப்பட்டார். தொழில் வளரப் படிப்படியாகப் பல்வேறு அரசு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இன்று அவற்றின் பயன்பாடு பல்வேறு வகைகளாகப் பரந்து விரிந்துள்ளது.

1. சிட்கோ தொழில்பேட்டைகள் (SIDCO - Small Industries corporation)

தொழில் தொடங்குவோர் இடம் வாங்க, கட்டிடம் கட்ட, தண்ணீர் மின்சார இணைப்புகள் பெற ஏற்படும் பொருள் செலவையும் சிரமத்தையும் குறைக்க எல்லா வசதிகளுடன் கூடிய ஒரே குடையின் கீழ் எல்லாம் கிடைக்கக் கூடிய தொழில்பேட்டை 1958ல் தொடங்கப்பட்டது. ஈரோட்டில் 25.13 ஏக்கரில் 15 தொழில் கூடங்கள் உள்ளன. சிறிய தொழிற் கூடங்கள் 8 உள்ளன.

இங்கு நெல் அறைக்கும் ஜல்லடை. மேசை நாற்காலிகள், அலுமினிய வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள், காகிதப் பொருட்கள், பிளாஸ்டிக் வீட்டுச் சாமான்கள், வெல்டிங் மற்றும் கிரில் செய்தல், இரசாயனப்பொருட்கள், மின்சார சாதனங்கள், பின்னியல் பொருட்கள், கணிப்பொறிப் பாகங்கள். இயந்திரங்கள், இயந்திர பாகங்கள் ஆகியவை செய்யப்படுகின்றன.

30 தொழிற் கூடங்களுடன் தாராபுரத்திலும், 9 தொழிற் கூடங்கள் 5 சிறு தொழிற்கூடங்களூடன் நஞ்சை ஊத்துக்குளியிலும், பெருந்துறையில் 'தாட்கோ' (THADCO) தொழில் பேட்டையும் உள்ளன. இவற்றால் பல தொழில் முனைவோர் பயன்பெறுகின்றனர்.