பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

ஈரோடு மாவட்ட வரலாறு


பெரியபாளையம் கல்வெட்டில் பதினெண் விஷயத்தார் குறிக்கப்பெறுகின்றனர். வேம்பத்திக் கல்வெட்டில் பல பகுதி பெருநிரவியார் கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது. கர்னாடக மாநிலம் 'அய்ஹோளே' என்ற இடத்தில் கூடிய வணிகக் குழுவின் பெயர் தமிழில் ஐம்பொழில், அய்யபொழில் எனப்படும். மேல்கரை அரைய நாட்டின் கொடுமுடியை அடுத்துள்ள திருக்காடுதுறை ஒரு அய்யபொழில் நகரம் ஆகும்.

வணிகப் பொருட்கள் குழுவினரால் தலைச்சுமையிலும் வண்டி. எருது, கழுதை, குதிரை, யானை இவற்றிலும் கொண்டுவரப்பட்டன. கீரனூர்க் கல்வெட்டில் 'சுங்கம்' குறிக்கப்படுகிறது.

பலவகை வணிகர்கள்

பிற்கால ஈரோடு மாவட்ட ஆவணங்களில் இருபத்திநான்கு மனைத் நெலுங்கச் செட்டி, எட்டு வகைப் பலர், ஆயிரவர், ஐநூற்றுவர், பன்னிரண்டார், கவறைச் செட்டி, கன்னடச் செட்டி, தெலுங்கச் செட்டி. கொங்கர் செட்டி, கோமுட்டி, சாலியசெட்டி. ஐம்பத்தாறு தேசத்துப் பலர், பட்டு நூல் செட்டி, மூத்தாஞ்செட்டி, ராவுத்தமார், வெள்ளாஞ் செட்டி, வைசியாள் எனப் பலர் குறிக்கப்பெறுகின்றனர். பிற்கால வணிக மையங்கள் 'பேட்டை' என அழைக்கப்பட்டன.

வணிகக் குழுவினரின் அடையாளச் சின்னங்கள் பொறிக்கப்பட்ட சிற்பக்கற்கள் தாராபுரம், எல்காம் வலசு, பழமங்கலம், நல்லூர் போன்ற ஊர்களில் கிடைத்துள்ளன.

பாதுகாப்பு வீரர்கள்

வணிகர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு வீரர்களையும் வீரர் குழுக்களையும் வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எறிவீரர், முனை வீரர், வீரக்கொடியார், கொங்கவாளார், அத்திகோசத்தார் எனப் பல வகைப்பட்டனர். யானைப் படையினரான அத்திகோசத்தார் நல்லூர்க் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றனர். எறிவீரர் பாதுகாப்பில் உள்ள நகரம் எறிவீரபட்டினம் எனப்பட்டது. பவானி வட்ட வேம்பத்தி,