பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

ஈரோடு மாவட்ட வரலாறு


பாலபாரதி முத்துசாமி ஐயர் (10ஆம் நூற்றாண்டு)

பவானியில் வாழ்ந்த பரம்பரைப் புலவர் மரபினர். பாம்பன கவுண்டர் குறவஞ்சி, சிவகிரி தண்டிகைக் காளியண்ணன் குறவஞ்சி, பவானி விறலி விடு தூது போன்ற இலக்கியங்களை இயற்றியுள்ளார். பவானி, சென்னிமலை, அவிநாசி, காசி முதலிய தலங்கள் பற்றிய பல இசைப்பாடல்கள் பாடியுள்ளார்.

வே.ரா.தெய்வசிகாமணிக்கவுண்டர் (1903-1972)

எழுமாத்தூர் வேலம்பாளையத்தைச் சேர்ந்தவர். வாழ்நாள் மழுவதும் ஓலைச் சுவடிகள் தேடித்தொகுத்துப் பாதுகாத்தவர். தேவி மான்மியம், சித்திர மடல், மல்லைக்கோவை, திருச்செங்கோட்டுப் பிள்ளைத் தமிழ், வாலசுந்தாக்கவிஞரின் கொங்கு மண்டல சதகம், மேழி விளக்கம், பரத சங்கிரகம் பதிப்பித்தவர். அழிந்து போனதாகக் கருதப்பட்ட சங்ககால இசை நூல் பஞ்சமரபைக் கண்டுபிடித்து பத்மபூஷன் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் உதவியால் பதிப்பித்தார்.

ம.ப.பெரியசாமித்தூரன் (1908-1987)

மொடக்குறிச்சிக் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சக்காட்டு வலசைச் சேர்ந்தவர். இந்திய மொழிகளிலேயே முதன்முதல் தமிழுக்குக் கலைக்களஞ்சியம் தொகுத்து அளித்தவர். 'குழந்தை உள்ளம்' போன்ற 10 உளவியல் நூல்களையும் 'நல்ல நல்ல பாட்டு' முதலிய 16 குழந்தைப் பாடல் நூல்களையும் எழுதியுள்ளார். 'பாரதி தமிழ்' தொகுத்த இவர் பாரதியார் பற்றி 10 நூல்கள் எழுதியுள்ளார். பல கதை, நாடக நூல்களையும் 'இசைமணி மஞ்சரி' போன்ற இசைத்தமிழ் நூல்களையும் எழுதியவர். 'பத்மபூஷன்' விருது பெற்றவர்.

புலவர் அ.மு. குழந்தை (1906-1972)

அறச்சலூரை அடுத்த ஓலவலசு கிராமத்தினர். 'நெருஞ்சிப்பழம்' உள்ளிட்ட பல கவிதை நூல்களையும், பூவாமுல்லை உள்ளிட்ட உரைநடை நூல்களையும் திருக்குறள், தொல்காப்பியப் பொருளதிகாரம்