பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

ஈரோடு மாவட்ட வரலாறு


(8) மொள்ளமாரி - ஏமாற்றுப் பேர்வழி
"பெரியூட்டுத் தம்பி ஒரு மொள்ளமாரிங்க"

(9) நங்கை - அண்ணன் மனைவி
"நங்கெ அண்ணளெங்கீங்க"

(10) (செருப்பைத்) தொடுதல் - (செருப்பை) காலில் அணிதல்
"பொடி கடுது; செருப்பைத் தொட்டுட்டு வா"

சில சொற்கள் பிற மாவட்டங்களிலும் வழக்கில் உள்ளவை.

பழமொழிகள்

(1) "காஞ்சமாடு கம்புல பூந்த மாதிரி"
(2) “மொடக்கடிக்காரனுக்கும் பொடக்காணியிலே தடம்"
(3) "கோமணத்திலே ஒரு காசு இருந்தா கோழி கூப்பிடப் பாட்டுப் பாடுவான்"
(4) "ஆடு மேச்ச மாதிரி
அண்ணனுக்குப் பொண்ணுப் பாத்த மாதிரி"
(5) “தாயும் புள்ளையும் ஒண்ணுண்னாலும்
வாயும் வவுரும் வேறே"

விடுகதைகள்

(1) "கண்டு பூப் பூக்கும் காணாமல் காய்காய்க்கும்"

(கடலைச் செடி)

(2) "அக்கா வூட்டுக்கு தங்கச்சி போவா

தங்கச்சி வூட்டுக்கு அக்கா போகமாட்டா"

(அண்டா, செம்பு)

(3) "தோட்டமெல்லாம் பூவிருக்கு
பொறிக்க முடீலே"

(நட்சத்திரங்கள்)