பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

ஈரோடு மாவட்ட வரலாறு


புரம் என முடியும் ஊர்கள் 90
பதி என முடியும் ஊர்கள் 55
காடு என முடியும் ஊர்கள் 54
கரை என முடியும் ஊர்கள் 33
குட்டை என முடியும் ஊர்கள் 185
மங்கலம் என முடியும் ஊர்கள் 26
நல்லூர் என முடியும் ஊர்கள் 18
புத்தூர் என முடியும் ஊர்கள் 10

ஓடு, தொழுவு, குறிச்சி, நிலை, பாடி, கயம், பள்ளி, பேட்டை, குழி, வாவி என முடியும் ஊர்களும் உள்ளன. பிற தனித்தனிப் பெயர்கள் உடையவை.

சில பெரிய வருவாய்க் கிராமங்கள் நிருவாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டன. பெயரளவில் இரண்டு கிராமங்களே தவிர அவை ஊரமைப்பில் ஒன்றேதான். வெள்ளோடு - வடமுகம் வெள்ளோடு, தென்முகம் வெள்ளோடு பிடாரியூர் - முகாசி பிடாரியூர், அட்டவணைப் பிடாரியூர் காளமங்கலம் - புன்செய்க் காளமங்கலம், நன்செய் காளமங்கலம் பூத்துறை - அவல் பூந்துறை, துய்யம் பூந்துறை சுத்தாங்கண்ணி - சர்க்கார் சுத்தாங்கண்ணி, அக்கிரகார கத்தாங்கண்ணி அக்கிரகாரம் - பிராமண பெரிய அக்கிரகாரம், பிராமண சின்ன அக்கிரகாரம், சர்க்கார் பெரிய அக்கிரகாரம், சர்க்கார் சின்ன அக்கிரகாரம். என்பன அவ்வாறு பிரிக்கப்பட்டுள்ள ஊர்களாம்.

நீண்ட பெயர்களை அண்மைக் காலத்தில் ஆங்கில எழுத்துக்களை வைத்துச் சுருக்கி அழைக்கின்றனர். அச் சுருக்கப் பெயர்களே எங்கும் வழங்கப்படுவதால் முழுப்பெயர்கள் காலப்போக்கில் மறைந்து விட வாய்ப்பு உள்ளது.

தூக்கநாயக்கன்பாளையம் டி என் பாளையம்
கந்தப்பகவுண்டன் வலசு கே ஜி வலசு
புறாப்பாளிக்காட்டு வலசு பி கே வலசு