பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

201


சில சிற்றூர்களைக் குறிக்க அருகில் உள்ள பெரிய ஊர்ப்பெயரோடு இணைத்துக் கூறினர். அங்கும் சுருக்கம் வந்துவிட்டது.

பி. வெள்ளாளபாளையம் - பாரியூர் வெள்ளாளபாளையம்
பி. மேட்டுப்பாளையம் - பெருந்தலையூர் மேட்டுப்பாளையம்
கே. கந்தசாமிபாளையம் - கொல்லன்கோயில் கந்தசாமிப்பாளையம்

சில ஊர்ப் பெயர்களைச் சுருக்கியோ ஒரு பகுதியையோ கூறி அழைக்கின்றனர்.

தலைய நல்லூர் - தலசை
காரையூர் - காரை
கொற்றனூர் - கொற்றை
பேரோடு - பேரை
கோபிசெட்டிபாளையம் - கோபி
சத்தியமங்கலம் - சத்தி
தாராபுரம் - தாரை
வீராட்சிமங்கலம் - வீரை

இப்பெயர்களும் சில இலக்கியத்திலும் இடம்பெற்று விட்டன. கிழாம்பாடி, சாத்தம்பூர், சதுமுகை, பாலத்தொழு போன்ற பல ஊர்கள் முற்றிலும் அழிந்துவிட்டன. ஊர் நத்தப் புறம்போக்காக உள்ளது.

சில பழைய ஊர்ப் பெயர்கள் முழுமையாக மாறிவிட்டன.

பழைய பெயர் - மாறிய பெயர்

சிலம்பூர் - எண்ணமங்கலம்
தலய நல்லூர் - சிவகிரி
நட்டூர் - காடையூர், பரஞ்சேர்வழி, கூகலூர்
விதரி - அத்திப்பாளையம்
சிங்கை - காங்கயும்
பட்டாலி - அரசம்பாளையம்
குறிச்சி - லக்குமநாயக்கன்பட்டி
முகுந்தனூர் - பெரியபாளையம்