பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

213


ஆகியோருக்குச் செய்த பேருதவிகளை மணிமேகலை கூறுகிறது. பழைய கோட்டையிலும் ஒரு "மணிமேகலை" இருந்துள்ளார்.

ஒன்பதாவது பட்டக்காரர் பெரிய சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் மனைவியார் பெரியாத்தா. அவர்

'மனிதரில் கூன்குருடு நொண்டி
சப்பாணியும்
     மாடுஆடு நாய் பூனை அம்
மாதிரி இருப்பதும் சேர்ந்து அறுபதுக்கு நிதம்
     மகிழ்ச்சியாய் இருவேளையும்
புனிதமுள ராகி சோளம் கம்பு ஏதாகிலும்
      போட்டு இருமுடாக் கஞ்சியும்
பொரித்த கொள்ளுக் கூட்டும்"

வழங்கியதாகக் சுருங்குமரப் புலவர் பாடியுள்ளார்.

நஞ்சையன் சர்க்கரையார் மனைவி வஞ்சியாத்தாள் விவசாயப் பணிகள் அனைத்தையும் குதிரை மீதேறிச் சென்று பார்வையிட்டு வந்தார். நஞ்சையன் சர்க்கரையார் இரவில் நாடு காவல் காரணமாகப்

"பட்டப் பகல்எலாம் தூங்குவாராம் - அவர்
பத்தினி பண்ணையம் பார்ப்பாராம்"
"நஞ்சையன் பத்தினி வஞ்சியாத்தான் - அவர்
நல்ல குதிரைச் சவாரி செய்வார்
கஞ்சி ஒரு மிடா நித்தமும் காய்ச்சியே
காலையில் ஏழைகட்கு ஊற்றுவாராம்"

என்று பாடுகிறார் மடவளாகம் சிவராம தேசிகர்.

சம்பந்த சர்க்கரையார் மனைவியுடன் இராமப்பையனால் சங்ககிரிக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். அங்கு வந்து பாடிய வெற்றிவேல் புலவருக்குக் கொடை கொடுக்கப் பொருள் இல்லாததால் அவர் மனைவியார் புலவருக்குத் தன் தாலியையே கொடை யாகக் கொடுத்தார்.

பெண்கன் பெயரால் "கவுண்டச்சிபாளையம்" போன்ற பல ஊர்கள் அழைக்கப்படுகின்றன.