பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

217


கோவை நகரில் இருந்த மாவட்ட மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதால் ஈரோட்டில் மரவட்டத் தலைமை மருத்துவமனை தொடங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 10 அரசு ஆங்கிலமுறை மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு 1145 படுக்கைகள் உள்ளன. 66 ஆரம்பசுகாதார மையங்களும் 412 துணை சுகாதார மையங்களும் இதர மருத்துவ நிறுவனங்கள் 912ம் உள்ளன (2000). இவற்றில் 258 மருத்துவர்களும் 242 செவிலியரும் உள்ளனர்.

10 இந்திய மருத்துவமனைகளும் இரண்டு மருந்தகங்களும் 30 ஆரம்பசுகாதார நிலையங்களும் 25 படுக்கைகளும் 30 மருத்துவர்களும் 3 செவிலியர்களும் உள்ளனர். ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் உள்ளார். ஐந்து படுக்கைகளும் உள்ளன. குன்னத்தூர் தாளப்பதியில் வெறிநாய்க்கடிக்கு சிகிச்சை தரப்படுகிறது.

பெருந்துறை காசநோய் மருத்துவமனை

பெருந்துறையில் மேற்கே 300 மீட்டர் உயரமுள்ள தூய காற்றோட்டமுள்ள இடத்தில் 'இராமலிங்கம் காசநோய் மருத்துவமனை' உள்ளது.

1933ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் வெலிங்டன் பிரபு காச நோய் ஒழிப்பு அவசியம் பற்றி மிகவும் வலியுறுத்தினார், தனி மருத்துவமனைகள் தொடங்குமாறு கூறினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் ஏ.சி. வுட் ஹவுஸ் அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். 1935ஆம் ஆண்டு "கோய முத்தூர் மாவட்ட காசநோய் மருத்துவமனைக் குழு' என்ற குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்தார். அக்குழுவில் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், நல்லதம்பிச் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார். சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார், டி.ஏ. இசாமலிங்கம் செட்டியார், பி.சி. சாத்தப்ப செட்டியார், வி.எஸ். செங்கோட்டையா, ஏ. வேணுகோபாலப் பிள்ளை, எஸ். வின்சென்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அப்போது கொண்டாடப்பட்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூடிய வெள்ளிவிழா நிதி ரூபாய் 60000 இருந்தது. குழுவில் இருந்த