பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

ஈரோடு மாவட்ட வரலாறு


மரபினர் பல்லவராயர் பட்டம் பெற்றனர். சொக்கநாத நாயக்கர் காலத்தில் ஈரோட்டில் வீற்றிருந்து கொங்கு நாட்டில் ஒரு பகுதியை நிர்வாகம் செய்துள்ளனர். அமராவதிப் பல்லவராயர் நாயக்கர் தளவாய் ரங்கா ரெட்டியாரால் "கணவாய்ச் சீமையில் 18 கோட்டைகளின் தலைவராக“ நியமிக்கப்பட்டார்.

பழைய கோட்டை சர்க்கரை மன்றாடியார்

இவர்கள் கொங்கு வேளாளரில் பயிரகுலத் தலைவர்கள், அனைவரும் இயற்பெயரோடு "சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார்" என அழைக்கப்பட்டுள்ளனர். வேளாண்மைக்கு இவர்கள் ஆற்றிய பணி சிறப்புக்குரியது. 26ஆம் பட்டக்காரர் 'நல்லதம்பிச் சர்க்கரை உத்தமக்காமிண்ட மன்றாடியார் "காங்கேயம் இனம்" காளையை உருவாக்கியவர். ஆனூரிலும், காரையூரிலும் தங்கிப் பட்டக்காரர்கள் இருந்து நிர்வாகம் செய்துள்ளனர். இவர்கள் மரபு பற்றி 45 புலவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர். எல்லோருக்கும் இனிமையான செயல் செய்ததால் "சர்க்கரை” என்று பெயர் பெற்றனராம்.

சங்கரண்டாம்பாளையம் வேணாடுடையார்

இவர்கள் கொங்கு வேளாளரில் பெரிய குலம் சார்ந்தவர்கள். வேள்+நாடு வேணாடு என ஆயிற்று. இவர்கள் முதல் வீட்டுக்காரர் என அழைக்கப் பெறுவர்.

"மூவேந்தர் கூடி முதல்வீடன் ஆம் எனவே
சீரார் முடிசூட்டி"

என்பது ஒரு பாடல் பகுதியாகும். குலோத்துங்க சோழனுக்கு அடங்காத வணிகர்களை அடக்கி 'செட்டி' பட்டம் பெற்றனர். சங்கரண்டாம் பாளையத்தின் பழைய பெயர் 'கொற்றனூர்'. சோழமன்னன் கொடுத்த “பொன்னூஞ்சல் பூந்தேர்" பெற்றவர்கள்.

பிறபட்டக்காரர்கள்

வேட்டுவர் சமுதாயத்தில் தென்னிலை, திங்களூர் அப்பிச்சிமார் மடம் ஆகிய இடங்களில் பட்டக்காரர்கள் இருந்துள்ளனர். செங்குந்தர்