பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

ஈரோடு மாவட்ட வரலாறு


"மறுசென்மத்துக்கும் ஏழெட்டு சமணரை குத்திக் கொண்ண தோஷத்திலே போவானாக" என்று கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. சமணர்கள் இல்லாத ஊர்களில் உள்ள சமண சிலைகளையும் கோயில்களையும் "அமணீசுவரர்" என்ற பெயரில் சமணர் அல்லாதவர்கள் வணங்கி வருகின்றனர்.

காகம், காஞ்சிக்கோயில் கொங்கு வேளாளரில் கண்ண குலத்தார் "இராவுத்தமார்" என்ற இஸ்லாமியப் பெரியவரைக் குலதெய்வமாக வணங்குவதும் பறையர் சமூகம் சார்ந்த குப்பியண்ணன், வீரசாம்புவன் போன்றவர்களுக்கு கோயில்கட்டி வேளாளர்கள் வழிபடுவதும் காடையூர்க் காணி பெற உதவிய இஸ்லாமிய சர்தாருக்கு நன்றிக்கடனாக வெள்ளையம்மாள் மக்கள் முழுக்காது பிரிவினராக பொருளந்தை குலத்தில் அழைக்கட்டு இஸ்லாமியப் பழக்கவழக்கத்தைப் பின்பற்றியதும் சமய ஒருமைப்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.

கொங்கு வேளாளர்

இவர்கள் 'காராளர்' என்றும் அழைக்கப் பெறுவர். ஈரோடு மாவட்டத்தில் இவர்கள் கொடைக் கல்வெட்டுக்களே அதிகம். விசயமங்கலம், குன்னத்தூர், திங்களூர், கீரனூர், பொன்னிவாடி முதலிய பல ஊர்களில் இவர்கள் தொடர்பான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் 'வெள்ளாளன்' என்றே குறிக்கப் பெறுகின்றனர். 'வெள்ளாளர் சாத்தந்தைகளில் வீரசோழக் காமிண்டன்' என்பது போல குலப் பெயருடன் பெரும்பாலும் குறிக்கப் பெறுவர். "காடைகளில் ஆடன் புளியனான உத்தமசொழ மும்முடிப்பல்லவரையன்" போன்றோர் அரசனால் சிறப்புப் பெற்ற அதிகாரிகளாக இருக்கக்கூடும். "உமயாண்டான் மனைக்கிழத்தி வாமதேவன் மகள் பிள்ளையம்மை" எனக் கொடையளித்த பெண்கள் சிலர் கணவன் பெயரையும் தந்தை பெயரையும் இணைத்து கொண்டனர்.

நரம்பர்

இவர்கள் கொங்கு வேளாளரில் ஒரு பிரிவினர். கணவாளர், வடகரையார் என்றும் அழைக்கப்பெறுவர். வெள்ளாளர் கணவாளரில்