பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

244

ஈரோடு மாவட்ட வரலாறு


திண்டல் மலை

வேலாயுதசுவாமி கோயில். மலைப்பாதை உள்ளது. கோவையிலிருந்து வரும் வழியில் ஈரோட்டின் நுழைவாயிலில் உள்ளது.

சிவமலை

அருணகிரியார் பாடிய முருகன் கோயில், சித்தர், சிவவாக்கியர் சமாதி உள்ளது. மலைப்பாதை உள்ளது.

சென்னிமலை

அருணகிரியார் பாடிப் படிக்காக பெற்ற தலம். முருகன் கோயில், பிண்ணாக்குச் சித்தர் குகை உள்ளது. மலைப்பாதை உள்ளது.

வட்டமலை

காங்கயம் - தாராபுரம் வழியில் உள்ள முருகள் கோயில். சிறுமலை.

பவளமலை

கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள சிறு குன்று. முருகன் கோயில் உள்ளது.

பாரியூர்க் கோயில்கள்

முழுவதும் சலவைக்கற்களால் திருப்பணி செய்யப்பட்ட மிகச் சிறந்த அமரபரணீசுவரர் கோயில். கொண்டத்துக் காளியம்மன் கோயில் அருகில் உள்ளது.

அருள் மலை

திங்களூர் அருகில் உள்ள முருகன் கோயில், நஞ்சையப் புலவர் 1000 திருப்புகழ் பாடிய இடம்.

அப்பிச்சிமார் மடம்

திங்களூர் அருகில் உள்ளது. வேட்டுவர் சமூகப் பட்டக்காரர் ஊர். திங்களூரில் புஷ்பதந்த தீர்த்தங்கரர் சமணக்கோயில் உள்ளது.

பண்ணாரியம்மன் கோயில்

சத்தியமங்கலம் அருகில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோயில்.