பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

ஈரோடு மாவட்ட வரலாறு


ஆப்பக்கூடல்

சக்தி நகரில் சக்தி சர்க்கரை ஆலை; பெரிய ஏரி உள்ளது.

ஆலத்துக்கோம்பை

பண்ணாரியம்மன் சர்க்கரை ஆலை உள்ளது.

தவளகிரி

சத்தியமங்கலம் அருகில் உள்ள முருகன் கோயில். விஜயநகரக் காலத்திருப்பணி செய்யப்பட்ட கோயில், சிலப்பதிகாரம் கூறும் வெண்குன்று.

பழமங்கலம்

பாடல் பொறிக்கப்பட்ட தென்னகத்தின் ஒரே நடுகல் இங்கேயுள்ளது.

பழைய கோட்டை

அரண்மனை: புகழ்பெற்ற காங்கயம் காளைகள் உள்ள கால்நடைப் பண்ணை உள்ளது.

பெரியார் – அண்ணா நினைவகம்

ஈரோடு நகரில் பெரியார் சாலையில் உள்ளது. அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தீரன் சின்னமலை நினைவு மண்டபம்

ஓடா நிலையில் உள்ளது. அரசு அமைத்த நினைவுச் சின்னம். சின்னமலை கோட்டை இருந்த இடம்.

மேலப்பாளையம்

தீரன் சின்னமலை பிறந்த ஊர். பெரிய விநாயகர் கோயில், சின்னமலை சமுதாயக்கூடம் உள்ளது.

ஈரோடு

வ.உ.சி. பூங்கா; கலைமகள் பள்ளி அருங்காட்சியகம், அரசு அருங்காட்சியகம்; காரைவாய்க்கால் அருகே பெரும்பள்ளம்- காலிங்கராயன் பாலம் (13ஆம் நூற்றாண்டு) மகிமாலீசுவரர் கோயில் - 10ஆம் நூற்றாண்டு கதைத் திருப்பணி.