பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

247


பிரப் நினைவாலயம்

ஈரோட்டில் சி.எஸ்.ஐ. தேவாலயம் கட்டிடக் கலை நயம் மிக்கது.

ஷேக் அலாவுதீன் தர்கா

ஈரோடு காவிரிக்கரையில் உள்ளது. 18ஆம் நூற்றாண்டு மைசூர் மன்னர் கல்வெட்டு உள்ளது.

திம்பம்

இனிய மலைக்காட்சி காணத்தக்கது.

இராமலிங்கம் சேனடோரியம்

பெருந்துறையில் உள்ளது. மருத்துவக்கல்லூரியும் உள்ளது.

கொடுமணல்

ஓரத்துப்பாளையம் அணை; தொல்பொருள் அகழாய்வு செய்யப்பட்ட இடம்.

அறச்சலூர்

சமணமுனிவர் வாழ்ந்த குகை. இசைக் கல்வெட்டு உள்ளது. 1800 ஆண்டுகட்டு முற்பட்டது.

கோபி

சீதா கல்யாண மண்டபம். ஒரே சமயம் 5 திருமணங்கள் நடை பெறலாம் (இலவசம்)

தாளவாடி

திப்புசுல்தாள் கட்டிய பள்ளிவாசல் உள்ளது.